அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- ரூ.312 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும்.
ச.சா - பராமரிப்பு..??
************
தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் :- வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஒருவர் கூட தமிழகத்தில் மருத்துவ இடம் பெற முடியாது.
ச.சா - இந்த உறுதிமொழிய எல்லாம் மீறித்தான வேலைவாய்ப்புல, கல்வில அவங்க இடம் புடிக்குறாங்க..??
************
தமிழக அமைச்சர் வி.சரோஜா :- தமிழகத்தில் பிச்சைக்காரர்களே இல்லை.
ச.சா - அண்டப்புளுகுனு சொல்வாங்களே.. இதுதானா அது..??
************
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் :- பொது செலவினங்களைக் குறைக்காமல் நிதிப்பற்றாக்குறை இலக்கு எட்டப்படும்.
ச.சா - சொத்த விக்குறதுன்னு முடிவு பண்ணிட்டாங்களே..??

;