செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

அரசியல்

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ஊரடங்கு காரணமாக வரு மானம் இல்லை; ரேசன் அட்டை இல்லை; வாடகை தர பணம் இல்லை. குடும்ப பொறுப்பை சுமக்கும் நகர்ப்புற பெண்கள் கடுமையாக பாதிப்பு என ஆய்வு.  இந்தியர்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டுமானால் சிதைந்த இந்திய பொருளாதாரம் மீட்கப்பட வேண்டுமானால் இப்பொழுதாவது நாம் ஊரடங்கின் முதல் நாளிலிருந்து வலியுறுத்து வதை அமலாக்க வேண்டும். மாதம் ரூ. 7500 நிதியும் 10 கிலோ அரிசி யும் 6 மாதங்களுக்கு பசித்துள்ள அனைவருக்கும் இலவசமாக தாருங்கள்.

**********************
பட்டினி/விபத்து/ தற்கொலை/ காவல்துறை தாக்குதல் என வைரஸ் அல்லாத காரணங்களால் 884 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்தி. ஊரடங்கு அமலானபிறகு பட்டினியாலும், பொருளாதார துயரத்தாலும் 167 பேர்;மருத்துவ சிகிச்சை உரிய நேரத்தில் கிடைக்காததால் 66 பேர்; சாலை மற்றும் ரயில் விபத்துக்களில் சிக்கி 209 பேர்; புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கடைசிக் கட்டத்தில் விடப்பட்ட ஷ்ரமிக் ரயில்களில் எந்த வசதியும் இல்லாமல், உணவும் குடிநீரும் இல்லாமல் பட்டினியில் சிக்கி 95 பேர்;  நாட்டின் பல பகுதிகளில் கொரோ னா அச்சம் மற்றும் வேலை பறி போனதால் தற்கொலையாக 125 பேர்; கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தலில் சிக்கி உரிய நிவாரணம் இல்லாமல் 36 பேர்; ஊரடங்கு தொடர்பான குற்றச்செயல்களில் சிக்குண்டு 18 பேர்; காவல்துறையினரின் கொடூர தாக்குதலில் சிக்கி 12 பேர்; கடும் வெயிலில் உடலில் நீர்ச்சத்து இல்லாமல் புலம்பெயர் தொழி லாளர்கள் 47 பேர்; நாட்டின் பல பகுதிகளில் மதுக்கடைகள் மூடப்பட்ட  நிலையில் தீவிர குடிநோயாளிகள் 49 பேர் மற்றும் வகைப்படுத்தப் படாமல் விபரங்கள் ஏதுமின்றி பதிவுசெய்யப்பட்ட 60 பேர் - என மொத்தம் 884 பேர் இந்தக் காலக்கட்டத்தில் அநியாயமாக உயிரை இழந்துள்ளனர். இந்த பெருந்தொற்றை எதிர் கொள்ள நமது சுகாதார அமைப்பு களையோ அல்லது மக்களையோ தயார்ப்படுத்த கிடைத்த முக்கிய மான மூன்று மாதங்களை மோடி அரசாங்கம் பயன்படுத்த தவறியது. முதலில் டிரம்ப்பை வரவேற்பதிலும் பின்னர் எதிர்க்கட்சிகளின் அரசாங் கங்களை கவிழ்ப்பதிலும் காலம் செல விடப்பட்டது. இப்பொழுது மாநிலங் களவை தேர்தலில் வெற்றி பெற  குதிரை பேரம்! இதைவிட மனிதாபி மானமற்ற செயல் வேறு இருக்க முடியுமா?.

**********************

நிர்ப்பந்தப்படுத்தி பெறப்பட்ட ஆயிரக்கணக்கான கோடிகள் எங்கே போகின்றன மோடிஜி? இன்னொரு மெகா ஊழலா? இந்தியா இன்னொரு முறை கொள்ளையடிக்கப்படுகிறதா!

 

;