அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் அன்பழகன் :-  கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப்பிரிவுகள்.
ச.சா - ஏற்கனவே இருக்குற பாடப் பிரிவுகளுக்கு ஆசிரியர்கள எப்போ நியமிப்பீங்க..??
 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் :- பணமதிப்பு இழப்பு விவகாரத்தால் பொருளாதார பாதிப்பு ஏதுமில்லை.
ச.சா - அம்பானி, அதானிக்கு லாபம் அதிகரிச்சத வெச்சு சொல்றீங்களா..??
 

பிரதமர் மோடி :- ஆணவத்தோடு கட்சிக்காரர்கள் நடப்பதை ஏற்க முடியாது.
ச.சா - இதுவரைக்கும் என்ன நடவடிக்கை எடுத்துருக்கீங்க..??
 

செய்தி :- மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி.
ச.சா - அவருக்கு நட்சத்திர ஓட்டல் கட்டி வெச்சாதான் இந்தியாவுக்கு அனுப்புவாங்களோ..??

;