அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் :- மூன்றாவது இடத்திலிருந்து ஒன்பதாவது இடத்திற்கு தமிழகம் சென்றதாகச் சொல்லப்படும் ஆய்வறிக்கை தவறானது.
ச.சா - ஏன்.. நிலைமை அதவிட மோசமாயிட்டு வருதோ..??
***
ஜி-20 நாடுகள் தீர்மானம் :- பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதி முடக்கம்.
ச.சா - அமெரிக்காவப் பக்கத்துல உக்கார வெச்சுகிட்டு இப்புடி தீர்மானம் போடுறாங்களே..??
***
மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி :- கும்பல் வன்முறைகளை அரசியலாக்கக்கூடாது.
ச.சா - வன்முறைக்கும்பல் அரசியல் கும்பலாத்தான இருக்குது..!!
***
துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு:- உலகிலேயே மதச்சார்பின்மை மிகுந்த நாடு இந்தியா.
ச.சா - உண்மைதான்.. ஆனா அதக் குலைக்கனும்னு பெரிய கும்பலே அலையுதே..!!

;