அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா :- குமாரசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன.
ச.சா - ரூபாய் நோட்டுக்கள எண்ணா மலயே வீசுறீங்களோ...?!?
******
செய்தி :- மக்கள் நீதி மய்யத்துக்காக பிரசாந்த் கிஷோர் நிறுவனம் பணியாற்ற முடிவு.
ச.சா - சில நூறு கோடிகள் செலவா கும்னு சொல்றாங்களே...?!?
******
பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி :- நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது.
ச.சா - உங்க பிரச்சார மேடைல பாஜக
தலைவர்கள் பேசுனப்ப நீங்க எதிர்க்க
லையே..?!?
******
மத்திய அரசு வருவாய்த்துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே :- வரி உயர்வால் அரசுக்கு கூடுதலாக ரூ.30,000 கோடி கிடைக்கும்.
ச.சா - அது யாருக்கு போய்ச் சேரும்....?!?

;