அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் :- விவசாய நிலங்களைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்துக்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது.
ச.சா - அப்புறம் ஏன் புதைவட மின்கம்பி, எட்டுவழிச்சாலைனு பிடிவாதமா இருக்கீங்க..??
*****
செய்தி :- 1 கோடி ரூபாய் வரையில் மானியம் அளிக்கும் புதிய ஆய்வுத் திட்டத்தை பல்கலைக்கழக மானியக்குழு அறிமுகப்படுத்துகிறது.
ச.சா - மதவெறி நிகழ்ச்சி நிரலுக்கு உதவி செய்யவா..??
*****
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் :- கடந்த ஆண்டில் சிபிஐ பதிவு செய்த 316 வழக்குகளில் 250 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ச.சா - யாரையுமே தண்டிக்கல... அப்படித்தான..??
*****
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் :- பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 14, 202 கோடி ரூபாய் நஷ்டம்.
ச.சா - நீங்க ஆட்சிக்கு வந்தப்ப லாபத்துல ஓடிட்டுதான இருந்துச்சு..??

;