அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- இவ்வளவு ஆதரவு அலையை 2014ல் கூட நான் பார்க்கவில்லை.

ச.சா - பிரச்சாரம் முடிஞ்சவுடன முத வேலையா கண் டெஸ்ட் பண்ணுங்க..!!

********

தமிழகக் கல்வித்துறை :- தமிழகத்தில் 709 அங்கீகாரமில்லாத பள்ளிகள்.

ச.சா - ஒவ்வொரு முறையும் எண்ணிக்கையச் சொல்றாங்க.. ஏன் நடவடிக்கை இல்லை..??

********

செய்தி :- ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா.

ச.சா - அமெரிக்காவப் பாத்து நாம ஏன் பயப்படணும்..!!??

********

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்:- தாக்குதல் நடத்துவதுதான் விமானப் படையின் பணி. இறந்தவர்களின் உடல்களை எண்ணுவது அவர்கள் வேலையல்ல.

ச.சா - உண்மைதான்.. அவங்களே எண்ணாதப்ப நீங்க எப்புடி 300, 400னு கதை விட்டீங்க..??

;