அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பொருளாதார ஆய்வறிக்கை :- நாட்டின் பொருளாதாரம் 7 சதவிகிதம் வளர்ச்சி பெறும்.
ச.சா - போன ஆண்டு சொன்ன அளவுக்கு ஏன் வளரலேன்னு ஆய்வு பண்ணுனீங்களா..??
*******
மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் :- கட்டுரைப் பதிவுக்கு கிரண் பேடி வருத்தம் தெரிவித்து விட்டார்.
ச.சா - டுவிட்டர்ல குற்றம் சாட்டுன அவர் அதுலயே வருத்தம் தெரிவிச்சுருக்கலாமே..??
*******
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:- ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் முன்பு நிச்சயம் பதில் சொல்வேன்.
ச.சா - இவ்வளவு முக்கியமான பிரச்சனைல ஏற்கனவே இரண்டு முறை கூப்புட்டதுக்கு போகலையே..??
*******
செய்தி : - தமிழகத்தில் மீண்டும் ஒரு சாதி ஆணவக்கொலை.
ச.சா - இதுக்கு எதிரா ஆளுங்கட்சில தர்ம யுத்தம் நடத்த மாட்டாங்களா..??

;