அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

ச. சா - அதாவது, தண்ணீர் பிரச்சனைக்கு மக்கள் மேல பழிபோடப் போறீங்க..?!

 

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ:- மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டால் அதிமுக குரல் கொடுக்கும்.

ச.சா - இதுவரைக்கும் குரல் கேட்கவேயில்லையே.. ஏன்..?!?

 

பாஜக எம்.பி. ஷோபா :- பசுவதைத் தடைச்சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.
ச.சா - மனித வதை நடக்குதே... அதத்தடுக்க ஏதாவது திட்டம் இருக்கா..?!?

 

செய்தி :- ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவு.
ச.சா - சேதம் எவ்வளவுனு மதிப்பீடு பண்ணுனீங்களா...?!?

;