அறிவியல்

img

இன்றுடன் முடிவுக்கு வரும் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம்

விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் இன்று இரவுடன் முடிவுக்கு வர உள்ளது. 
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டரை அனுப்பி வைத்தது. 
செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.30 மணியில் இருந்து விக்ரம் லேண்டரை தரை இறக்க செய்வதற்கான நடவடிக்கையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். விக்ரம், லேண்டர் தரையிரங்க வேண்டிய  இடத்தை அடைவதற்கு 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டருக்கும், இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து  2 நாளில் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியது. விக்ரம் லேண்டர் அதன் நான்கு கால்களில் நிற்காமல், ஒரே துண்டாக விழுந்து சாய்ந்து கிடப்பது அதில் தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டருடனான தொடர்பை மீட்டெடுக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.  இந்த முயற்சியில் இஸ்ரோவுடன் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசாவும் களம் இறங்கியது.

நாசாவின் ஜெட் புரபல்சன் லேபரட்டரி, விக்ரம் லேண்டருக்கு ‘ஹலோ’ என்ற செய்தியை ரேடியோ சிக்னல்கள் வாயிலாக அனுப்பி பார்த்தது. ஆனால் பலன் இல்லை.

இந்த நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை நாசாவின் எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கிற இடத்துக்கு மேலே வரும், அதன் கேமராக்கள் விக்ரம் லேண்டரைப் படம் எடுத்து அனுப்பும் என தகவல்கள் வெளி வந்தன.  ஆனால் விக்ரம் லேண்டர் விழுந்து கிடந்த இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் போனதால் படம் பிடிக்க முடியவில்லை என்று நாசா அதிகாரப்பூர்வமக தெரிவித்துள்ளது. 
இருப்பினும் அந்தப் பகுதியை எல்.ஆர்.ஓ., ஆர்பிட்டர் படங்கள் எடுத்து அனுப்பி இருக்கிறது. அதை நாசா விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.

இதை எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் துணை திட்ட விஞ்ஞானி ஜான் கெல்லர் உறுதி செய்திருக்கிறார்.  ஆனால் அதுவும் பலன் அளிக்க வாய்பில்லை. காரணம் விக்ரம் லேண்டரின் ஆயுள் காலமான 14 நாள் இன்று முடிவுக்கு வர உள்ளது. 
 

;