இணையம்

img

பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கசியவிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்

ஒன்பிளஸ் நிறுவன சாதனங்களில் முன் நிறுவப்பட்டது ஷாட் ஆன் ஒன்பிளஸ் (Shot on OnePlus) செயலி மூலம் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஒன்பிளஸ் மொபைல்களில், ஷாட் ஆன் ஒன்பிளஸ் செயலியில் பயனர்கள் எடுக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால், அந்த புகைப்படங்களின் ஒன்றை தேர்வு செய்து அவற்றை சர்வதேச அளவில் வால்பேப்பர்களாக வெளியிடுவதை ஒன்பிளஸ் வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஒன்பிளஸ் சர்வெர் மற்றும் ஷாட் ஆன் ஒன்பிளஸ் செயலிக்கு இடையேயான லிங்க் ஒன்றின் மூலம் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் வெளியானது கண்டறியப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஷாட் ஆன் ஒன்பிளஸ் செயலியை பயன்படுத்தியவர்களின் மின்னஞ்சல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் பயன்படுத்தும் ஏ.பி.ஐ. கொண்டு மற்றவர்களும் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை பார்க்க முடியும் என கூறப்படுகிறது. இந்த ஏ.பி.ஐ. open.oneplus.net எனும் இணைய முகவரியில் வெளியிடப்பட்டது. இந்த பிழை எப்போது முதல் இருந்தது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இந்த பிழை, சேவை துவங்கப்பட்டது முதலே இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

;