உலகம்

img

அமெரிக்கா: கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3148 ஆக  உயர்வு

இந்தியாவில் கெரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது
சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று இன்று உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
இந்நிலையில் தற்போது நாட்டில் மாநில அரசுகள் அளித்த தகவலின்படி, கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்து உள்ளது என தெரிய வந்துள்ளது.
இதன்படி, மராட்டியத்தில் 10 பேர், குஜராத் மற்றும் தெலுங்கானாவில் தலா 6 பேர், மத்திய பிரதேசத்தில் 5 பேர், பஞ்சாப்பில் 4 பேர், கர்நாடகாவில் 3 பேர், டெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர், கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 2 பேர், இமாசல பிரதேசம், தமிழகம், பீகாரில் தலா ஒருவர் என 45 பேர் பலியாகி உள்ளனர்.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,418 ஆகவும், சிகிச்சை முடிந்து சென்றவர்களின் எண்ணிக்கை 123 ஆகவும், பலி எண்ணிக்கை 45 ஆகவும் உயர்ந்துள்ளது.
எனினும், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 49 வெளிநாட்டினர் உள்பட மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,251 ஆகவும், சிகிச்சை முடிந்து சென்றவர்களின் எண்ணிக்கை 102 ஆகவும், பலி எண்ணிக்கை 32 ஆகவும் உள்ளது என தெரிவித்துள்ளது.

;