உலகம்

img

அமெரிக்கா:அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் சாலையில் அடையாளம் தெரியாத  நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், மிகவும் பரபரப்பான சாலை கொலம்பியா சாலை. வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள இந்த பகுதியில் நேற்று இரவு நடந்து சென்றவர்கள் மீது திடீரென அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு நடத்தினார். 
இதில் பலர் காயம் அடைந்துள்ளதாக உள்ளூர்  ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் துப்பாக்கி சுடு நடத்திய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
 

;