உலகம்

img

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

கிழக்கு இந்தோனேஷியாவில் இன்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. திமோர் தீவில் உள்ள குபாங் நகரில் இருந்து வடமேற்கில் 133 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருக்கிறது. 

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரம் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

;