உலகம்

img

பெருவில் பயங்கர நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான பெருவில் ஞாயிறன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆகபதிவான இந்த நிலநடுக்கம் லகுனாஸ் என்ற கிராமத்தின் தென்கிழக்கே 80 கி.மீட்டர் தொலைவிலும், யூரிமேகுவாஸ் என்ற பெரிய நகரத்தின் வடகிழக்கே 158 கி.மீட்டர் தொலை விலும், 114 கி.மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளது.இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  பெரு நாட்டு அரசாங்கத்தின் அவசரகால துறைவெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியும் இதனை உறுதிப்படுத்தி யுள்ளது.  இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.நிக்கோபர் இந்தியாவின் தென்கிழக்கே அமைந்துள்ளது. நிக்கோபார் தீவுகளில் ஞாயிறன்று காலை 7.49 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.35 கி.மீட்டர் ஆழத்தில் மையமாகக்கொண்டு ஏற்பட்ட இந்தநிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆக பதிவானது.  நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு கள் எதுவும் உடனடியாக வெளி யாகவில்லை.

;