உலகம்

img

பிரிட்டன் எண்ணெய் கப்பல் ஈரான் இடைமறிப்பு?

 லண்டன், ஜூலை 12- வளைகுடா நாடுகளின் கடற்பரப்பில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை தடுக்க ஈரானிய படகுகள் முயற்சி மேற்கொண்டதாகவும், ராயல் கடற்படை கப்பலால் முறியடிக்கப்பட்டதாகவும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரிட்ட னின் போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் மூன்று படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப் படுத்தப்பட்டது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானின் இந்த நடவடிக்கைகள் “சர்வதேச சட்டத்திற்கு முரணானது” என்று அவர் கூறியுள்ளார்.  தனது எண்ணெய் கப்பலை பிரிட்டன் தடுத்து வைத்திருப்பதற்கு பதிலடி வழங்கப்படும் என்று ஈரான் முன்னதாக எச்சரிக்கை விடுத்தது. ஆயினும், அத்தகைய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று ஈரான் தெரிவித்திருக்கிறது.

;