என்ன சொல்லியிருக்காங்க

img

கண்வலி விதை விலை சரிவு: விவசாயிகள் வேதனை

தாராபுரம்,  ஜூலை 11- தாராபுரம் பகுதியில் கண்வலி விதை விலை சரிவடைந்ததால் விவசாயிகள் வேதனை  அடைந்துள் ளனர்.  தாராபுரம் பகுதியிலுள்ள கொளத்துப்பாளையம், பொன்னி வாடி, உச்சனவலசு, கரையூர், வீராட்சிமங்கலம் ஆகிய கிராமங் களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்ப ளவில் கண்வலி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந் தாண்டு கண்வலி விதை கிலோ  ரூ.3 ஆயிரத்து 400 வரை விற்பனை யானது. ஆனால் இந்தாண்டு கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு மட்டுமே வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்துள்ளனர்.

இந்த விலைக்கு விற்றால் விவசாயிகள் நஷ்டம் அடைவார்கள்.  இதுகுறித்து பொன்னிவாடியை சேர்ந்த ராஜா என்னும் விவசாயி கூறுகையில், இந்தாண்டு தண்ணீர் பற்றாக்குறை, பூச்சிதாக்குதல், பனிக்காலத்தில் பூக்கள் கருகியது போக மீதி உள்ள கண்வலி விதைகள் மட்டுமே அறுவடை செய்யப்பட்டது. ஏற்கனவே போதிய மகசூல் இல்லாமல் நஷ்ட மடைந்த நிலையில், தற்போது விலை சரிவு என்பது விவசாயி களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற் படுத்தும். இதற்கு காரணம் ஏற்றுமதி செய்யும் 5 பெரிய வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்கின்றனர். வேறு  வழியில்லாமல் அவர்கள் நிர்ண யிக்கும் விலைக்கு விற்க வேண்டிய அவலநிலை ஏற்பட் டுள்ளது. இருப்பினும் பெரு நஷ்டம் ஏற்படும் என்பதால்  உரிய விலை கிடைக்கும் வரை அறுவடை செய்த கண்வலிவிதை  இருப்பு வைத்துள்ளோம்.ஆகவே  மத்திய வேளாண் இணை யகம் மூலம் உரிய விலை நிர்ணயம் செய்து நேரடியாக கொள்முதல்  செய்யவேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

;