என்ன சொல்லியிருக்காங்க

img

மனித உரிமைகள் திருத்தச் சட்ட முன்வடிவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு

புதுதில்லி, ஜூலை 23 - மனித உரிமைகள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவதற்காக நாடாளுமன்றத்தில் திங்களன்று மனித உரிமைகள் (திருத்தச்)சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்த்தார்கள். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் திங்களன்று மனித உரிமைகள் (திருத்தச்) சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டது. மாநிலங்க ளவைத் துணைத் தலைவர் அதன்மீது விவாதத்தை அனுமதித்தார். அவர் இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களிடம் இதன்மீது எதிர்ப்பு இருந்தால் முன்கூட்டியே தீர்மானம் (statutory resolution) கொண்டு வந்திருக்க வே ண்டும் என்றார். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த அரசு தலித்துகள் விரோத அரசு. இதனைச் செய்யாது என்று முழக்கமிட்டுவந்ததாலும், அவையை நடத்த முடியாததாலும் அவையை மதியம் வரை ஒத்தி வைத்தார்.  

;