செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

கட்டுரை

img

இந்திய அரசியல் வானில் என்றென்றும் ஒளி வீசும் ஜோதி

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக மட்டுமின்றி, உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து நின்றவர் அவர். 

நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்த அவர், கல்வி கற்பதற்காக லண்டன்சென்றார். முன்னதாக கொல்கத்தா பிரசிடென்ஸி கல்லூரியில் அவர் பயின்றார். ஐசிஎஸ் அதிகாரியாக ஜோதிபாசு வரவேண்டும் என்பது அவருடைய தந்தையாரின் விருப்பம். என்றும் அவர் லண்டனில் பார் அட் லாபடித்தார்.

அவர் லண்டனில் படித்த காலம் என்பது ஐரோப்பா கண்டம் முழுவதும்பாசிச எதிர்ப்பு சுழன்றடித்துக கொண்டிருந்த காலம். இத்தாலியில் முசோலினியும், ஜெர்மனியில் ஹிட்லரும் ஆட்சியைப் பிடித்து உலகத்திற்கே அச்சுறுத்தலாக விளங்கிக் கொண்டிருந்த காலம். சீனாவை ஜப்பான் ஆக்கிரமித்து கொண்டிருந்தது. லண்டன் உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பாசிசத்திற்கு எதிரான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. இவை ஜோதிபாசுவை மிகவும் ஈர்த்தன. 
இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்து கொண்டிருந்த விடுதலைப் போராட்டமும் ஜோதிபாசு உள்ளிட்ட இளம் மாணவர்களை ஈர்த்தது. லண்டனில் படித்துக் கொண்டிருந்த போது அங்கிருந்த கம்யூனிஸ்ட்தலைவர்களான ஹாரி பாலிட், பிலிப் ஸ்பிராட், ரஜினி பாமிதத், சக்லத் வாலா, ஹட்சின்சன் ஆகியோரை ஜோதிபாசுவும் அங்கு படித்துக்கொண்டிருந்த பூபேஷ் குப்தாவும் சந்தித்து உரையாடினர். தொழிலாளர்கள் நிலை மற்றும் தொழிற்சங்கங்கள் குறித்து புரிந்துகொள்ளவும் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்து வந்த விடுதலைப் போராட்டத்தை புரிந்துகொள்ளவும் இது அவர்களுக்கு நல்ல வாய்ப்பாகஅமைந்தது.அப்போது லண்டனில் படித்துக் கொண்டிருந்த மோகன் குமாரமங்கலம், என்.கே.கிருஷ்ணன், பெரோஸ் காந்தி, இந்திரஜித் குப்தா ஆகியோருடனும் ஜோதிபாசுவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இங்கிலாந்தில் பிறந்த பண்டிட் ஜவஹர்லால் நேரு, விஜயலெட்சுமிபண்டிட், சரோஜினி நாயுடு ஆகியோரையும் ஜோதிபாசு உள்ளிட்ட மாணவர்கள் சந்தித்தனர்.பார் அட் லா படிப்பு முடிந்து இந்தியா திரும்பிய தோழர் ஜோதிபாசுவழக்கறிஞர் தொழிலை செய்யாமல் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக மாறினார். ரயில்வே துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழிற்சங்கங்களை உருவாக்கி வளர்க்கும் பொறுப்பு அவரிடம்ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கினார்.தொழிற்சங்கங்களில் போராட்டம் என்பது தொழிலாளர்களின் பொருளாதார கோரிக்கைகளுக்காக மட்டுமின்றி அவர்களை மார்க்சிய வழியில்அரசியல் ரீதியாக அணிதிரட்ட பயன்பட வேண்டும் என்பது ஜோதிபாசுவின் கருத்து. இதை அவர் தனது துவக்க காலம் முதல் அரசியல் பணியாகசெய்து வந்தார். 

1946 சட்டமன்ற தேர்தலில் ரயில்வே தொகுதியிலிருந்து அவர் வங்கசட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். அதே காலத்தில் அனந்தநம்பியார், ரயில்வே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சென்னை மாகாண சட்டமன்றத்தில் பணியாற்றினார்.வங்க சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்து அவர் சிம்ம கர்ஜனை புரிந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது அகில இந்திய மாநாட்டில்ஜோதிபாசு கலந்து கொண்டார். அப்போது பி.சி.ஜோசியின் தவறான அணுகுமுறைகளை கண்டித்ததோடு, தோழர் பி.டி.ரணதிவே போன்ற தோழர்கள் முன்வைத்த ஸ்தாபன வழிமுறைகளை ஆதரித்தார். 

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் தலைமறைவாக இருந்து தொழிற்சங்கப் பணியாற்றினார்.1954ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கட்சியின் அகில இந்தியமாநாட்டில் மத்தியக்குழுவுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். ரதமராகஇருந்து நேருவைச் சந்தித்து கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான அடக்குமுறைகளை கைவிடுமாறு நேரில் வலியுறுத்தினார். போர்ச்சுக்கல் ஆக்கிரமிப்பில் இருந்த கோவா விடுதலை பெற வேண்டுமென சட்டமன்றத்தில்ஜோதிபாசு பேசினார். நாடாளுமன்றத்தில் இதே கோரிக்கையை ஏ.கே.கோபாலன் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர். ராணுவ தலையீட்டின் காரணமாகவே போர்ச்சுக்கல் பிடியிலிருந்து கோவா விடுதலையடைந்தது. 1959ல் இந்திய - சீன எல்லைப் பிரச்சனை எழுந்த போது தோழர்ஜோதிபாசு “நமது கட்சியைப் பொறுத்தவரை இத்தகைய எல்லைப் பிரச்சனைகள் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்பதில்உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்தோம். இந்தப் பிரச்சனைக்கு வேறு மார்க்கம் இல்லை என்பதே நமது கருத்து” என்று தெளிவுபடக் கூறினார். பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, நெல்சன் மண்டேலா, யாசர் அராபத்போன்ற பல்வேறு உலகத் தலைவர்களோடு ஜோதிபாசுக்கு நெருக்கமானதொடர்பு இருந்தது. இவர்கள் மேற்குவங்கத்திற்கு வருகை தந்த சமயங்களில் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி வரவேற்பு அளித்தார். 1967ல் மேற்குவங்கத்தில் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்த நிலையில், துணை முதல்வராக ஜோதிபாசு பொறுப்பேற்றார். இந்த ஆட்சி கலைக்கப்பட்டு 1969ல் ஐக்கிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோதும் ஜோதிபாசு துணை முதல்வராக பணியாற்றினார். இந்தக் காலங்களில் பல்வேறு முற்போக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நிலச் சீர்திருத்தம், குறைந்தபட்ச ஊதியம், தொழிற்சங்களுக்கு ரகசிய வாக்கெடுப்பு மூலம் அங்கீகாரம் என பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஜோதிபாசு காரணமாக இருந்தார்.1970ல் சிஐடியு மாநாடு மற்றும் இந்திய மாணவர் சங்க மாநாடு ஆகியவை கொல்கத்தாவில் நடைபெற்றன. 1970- 1971ல் மேற்குவங்கத்தில் அரை பாசிச அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. கட்சியின் ஆதரவாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் கொலைசெய்யப்பட்டனர். 20ஆயிரம் பேர் வரை சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ச்சியாக நடந்த தாக்குதலில் மேலும் 3 பேர் கொல்லப்பட்டனர்.
குறிப்பாக துர்க்காபூர் தொழிலாளர்களுக்கு எதிராக காவல்துறையும், துரோக தொழிற்சங்கமும் கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டகாலம் அது. 1975ல் அவசரநிலைக் காலம் அறிவிக்கப்பட்ட நிலையில் மிகக் கொடூரமான தாக்குதலை மேற்குவங்கத்தில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சந்தித்தன. இந்த அடக்குமுறைக் காலங்களில் ஜோதி
பாசு காட்டிய உறுதி என்றென்றும் நினைவில் நிற்கும். 1977ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இடதுமுன்னணி மகத்தான வெற்றிபெற்று ஜோதிபாசு முதல்வராகப் பொறுப்பேற்றார். அடுத்தடுத்த தேர்தல்களில் இடதுமுன்னணி தொடர்ந்து வெற்றிபெற்ற நிலையில், 2000ஆம் ஆண்டு வரை முதல்வர் பொறுப்பில் ஜோதிபாசு இருந்தார். 
மேற்குவங்கத்தில் இடதுமுன்னணி ஆட்சி நிலச்சீர்திருத்தம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் தேர்தல் மற்றும் பஞ்சாயத்துக்களுக்கு நிதி ஒதுக்கீடு அதிகாரம் முழுமையான ஜனநாயகம் என உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்தது. மத்திய - மாநில உறவுகளை சீர்செய்வதில் தோழர் ஜோதிபாசுவின்பங்கு குறிப்பிடத்தக்கது. ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஷேக் அப்துல்லா,பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்ஆகியோரை கலந்து கொள்ளச் செய்து மாநில உரிமைகளை வலியுறுத்தி மாநாடு நடத்தினார். பின்னர் ஜோதிபாசு முன் முயற்சியால் காஷ்மீரில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி மற்றும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான நதிநீர் சிக்கலைவெற்றிகரமாக தீர்ப்பதில் தோழர் ஜோதிபாசுவின் அணுகுமுறை மகத்தானது. தேவகவுடா பிரதமராக இருந்த போது இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பங்கீட்டைக் கூட உரியகாலத்தில் தீர்க்க முடியாத நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சனையை மிகவும் லாவகமாக அவர் தீர்த்து வைத்தார். இடதுமுன்னணி ஆட்சியில் மேற்குவங்கம் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்ந்தது. பாபர் மசூதி சங் பரிவாரத்தினரால் இடிக்கப்பட்டபோது இது காட்டுமிராண்டித்தனமான செயல் என்றுஜோதிபாசு கண்டித்தார். பரிவாரத்தினரை காட்டுமிராண்டிகள் என்றார்.பின்னர் வாஜ்பாய் இதுகுறித்து கேட்டபோது, அவர்களை வேறு என்னபெயரில் அழைப்பது என துணிச்சலாக கேட்டவர் ஜோதிபாசு. தோழர் ஜோதிபாசு தமிழகத்திற்கு வந்த பல சமயங்களில் அவருடைய உரையை தமிழில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.தமிழக அரசியல் குறித்து அவர் மிகவும் ஆர்வமாகக் கேட்டறிவார்.திருச்சி பெல் நிறுவனத்திற்கு ஆர்டர்கள் கிடைக்க அவர் பேருதவி புரிந்தார். மாநில உரிமைகளுக்காக நடைபெற்ற போராட்டங்களில் தமிழகத்தோடு இணைந்து பணியாற்றினார்.இன்றைக்கு கொரோனா தொற்று கால நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில், குறைந்தபட்ச உரிமைகளை கொண்டே ஒரு மாநிலத்தில் முன்னுதாரணமான ஆட்சியை நடத்திக் காட்டுவதில் ஜோதிபாசுவின் சாதனை என்றென்றும் நினைவுகூரப்படும். அதேபோல உலக அளவிலும் இந்திய அளவிலும் பாசிச கருமேகங்கள்சூழ்ந்துவரும் நிலையில், பாசிசத்திற்கு எதிரான அரசியல் மூலம் பொதுவாழ்க்கைக்கு வந்து, தன் வாழ்நாள் முழுவதும் பாசிச சக்திகளை எதிர்த்துபோராடிய ஜோதிபாசுவின் வாழ்க்கை இன்றைக்கு நாம் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

===இன்று (ஜூலை 7) தோழர் ஜோதிபாசு பிறந்த நாள்====

====தொகுப்பு : டி.கே.ரங்கராஜன்==== 

;