செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

கட்டுரை

img

ரிமாண்ட் கேசும்... கேசுவாலிட்டி மருத்துவரும்... - நித்தியானந்தம், நந்தன் கனகராஜ்

சாத்தான்குளம் மரண சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவத்துறையினர் இந்த மாதிரியான நிகழ்வுகளுக்கு எப்படி தொடர்பாகிறார்கள்? உண்மையில் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் அவர்கள் செய்ய வேண்டிய பணியின் முக்கியத்துவம்தான் என்ன? என்பதைப் பற்றி விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள் மருத்துவர் என்று பல தரப்பட்ட மக்களால் அழைக்கப்படுகிறவர் ஓய்வு பெற்ற குழந்தைகள் நல மருத்துவர் திரு பால்ச்சாமி. அவரோடு நடந்த  நேர்காணலின் தொகுப்பு: 

நீங்கள் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு மருத்துவராக அல்லாமல் சமூகத்தில் இருக்கக்கூடிய சாதாரண மனிதராக நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள்?

போலீஸ் விசாரணை செய்து அடித்துக் கொல்லுகிற அள விற்கு அவர்கள் ஒன்றும் பெரிய தவறைச் செய்துவிட வில்லை. அப்படி கடையைத் தாமதமாக அடைத்திருப்பதா கவே வைத்துக் கொண்டாலுமே அவர்களுக்கு முதலா வது எச்சரிக்கை கொடுத்து அனுப்பியிருக்கலாம் அல்லது அரசு கொடுத்த அறிவிப்புப்படி அபராதம்கூட விதித்திருக்க லாம். அதுதான் நடைமுறை. ஆனால் இந்த மாதிரியாக காட்டுமிராண்டித்தனமாக அடிப்பதை எந்த மனிதராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு சமூகப் பொறுப்புள்ள மனிதராக என்னாலும் இதை கட்டாயம் ஏற்கவே முடியாது. ஒரு விசாரணைக் கைதியை அடிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றமே அறிவுரை வழங்கியிருக்கிறது. அதன் நகல் அனைத்து அரசு மருத்துவமனைக்கும்கூட ஒரு சர்குலராகவே அனுப்பப்பட்டிருக்கிறது. ஆதலால் இந்த நிகழ்வு எல்லா வழியிலுமே வன்மையாக கண்டிக்கத்தக்கது தான்.

ஒரு அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவராக இந்த விச யத்தில் அவர் தனது பணியை சரியாகத்தான் செய்திருக்கி றார் என்று நினைக்கிறீர்களா?

இதைப் பற்றிய முழுவிவரமும் தெரிந்தால்தான் முழு மையாகச் சொல்ல முடியும். ஆனால் இந்த விசயத்தில் முறைப்படி ரிமாண்ட் செய்யப்பட்டவர்களின் விரவரங்க ளை விபத்துப் பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. அவர்களுக்கு காயம் அதிகமாக இருப்பதாகத் தெரிந்தால் அவர்களை முழுவதுமாக பரிசோதனை செய்து அட்மிட் செய்திருக்கலாம் அல்லது மேல் சிகிச்சைக்காக பரிந்துரை யாவது செய்திருக்கலாம். கூடவே அவர்களினுடைய நாடித்துடிப்பு, பிரஷர் எல்லாவற்றையும் பதிவு செய்திருக்க னும். இதையெல்லம் அவர் செய்திருந்தாரென்றால் சரியான முறையில் இவர்களை கையாண்டு இருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

 போலீஸ் ரிமாண்ட் கேஸ்களை அழைத்து வரும்போது எல்லாவற்றிற்குமே விபத்துப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா?

கட்டாயம் பதிய வேண்டும். குடிபோதையில் வருபவர்க ளுக்குகூட விபத்துப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்கிற உத்தரவிருக்கிறது. ஆனால் போலீஸ்காரர்கள் வேக மாக கையெழுத்து வாங்கிவிட்டு போகவேண்டும் என்ப தற்காகவே தப்பிக்கப் பார்ப்பார்கள். சில நேரங்களில் வெறு மனே புறநோயாளிச் சீட்டை மட்டும் காட்டி சிகிச்சை செய்து விட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் கைதி தனக்கு அடிபட்டி ருப்பதாக சொல்கிறபட்சத்தில் கட்டாயம் அதைப் பதிவு செய்துதான் ஆகவேண்டும். எல்லா ரிமாண்ட் செய்யப் பட்ட கேஸ்களையும் விபத்துப் பதிவேட்டில் பதிவு செய்யச் சொல்லி உச்ச நீதிமன்ற ஆணையேகூட வந்திருக்கிறது.

காவல்துறையினர் அந்த அரசு மருத்துவருக்கு நிர்பந்தம் கொடுத்த காரணத்தினால் தான் சான்றிதழை அவர் கொடுத்ததாக செய்திகள் வருகிறதே?

சாதாரணமாக போலீஸ் ரிமாண்ட் செய்யப்பட்டவர்க ளை கூப்பிட்டு வரும்போதே அடித்துத்துத்தான் கூப்பிட்டு வருவார்கள். அவர்களிடம் என்ன, ஏது என்று விலாவா ரியாக கேட்க வேண்டும். இதற்கு முன்பு வேறு ஏதேனும் வியாதி இருக்கிறதா, அதற்கு வைத்தியம் ஏதும் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா என்று கேட்க வேண்டும். என்ன நடந்தது, யாராவது அடித்தார்களா, வேறு ஏதேனும் செய்தார்களா என்றெல்லாம் நாங்கள் கேட்போம். அப்படியெல்லாம் இப்போது டாக்டர்கள் கேட்பது இல்லை. விசாரணைக் கைதிகளை அழைத்து வருகிறபோது போலீஸ் சொல்கிறதை வைத்து அப்படியே எழுதிவிடுகி றார்கள். டாக்டர்கள் எவரும் போலிஸூக்காக இதைச் செய்ய வேண்டுமென்று எதையும் திட்டமிட்டு செய்யவதில்லை. இப்படியான கேஸ்களின் முக்கியத்துவம் பற்றி உண்மை யில் அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் இந்த மாதிரி யான விசயங்கள் எல்லா காவல் நிலையங்களிலும், எல்லா அரசு மருத்துவமனையிலும் அன்றாடம் நடக்கத்தான் செய்கிறது. பொதுவாகவே பணியில் இருக்கிற டாக்டரை நிர்பந்திக்க வைக்கத்தான் அவர்கள் முயற்சிப்பார்கள். அவர் ஒரு வேளை ஜூனியர் டாக்டரா இருந்திருந்தால் சீனியர் மருத்து வரிடம் அழைத்து என்ன செய்ய வேண்டுமென்பதைக் கேட்டிருக்கலாம். அப்படியும் தெளிவு கிடைக்கவில்லை யென்றால் இணை இயக்குநரையேகூட அழைத்து முடிவெ டுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் ஒரு மருத்துவரின் மீது ஆதிக்கம் செலுத்தி சான்றிதழைக் கேட்டு நிர்பந்திப்ப தற்கான வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கிறது என்பதை யும் மறுக்க இயலாது.

 ஒரு அவசர சிகிச்சை விபத்துப் பிரிவில் பணியாற்றுகிற மருத்துவர் சாலை விபத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை 108 ஆம்புலன்ஸ் வழியாக எந்நேரமும் எதிர்கொண்டபடியே இருப்பார். அத்தகைய சூழலில் காவல்துறையினர் அழைத்துவருகிற ரிமாண்ட் செய்யப்பட்டவர்களையும் அதே அளவு கவனம் செலுத்தி பரிசோதித்து சிகிச்சையளிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்குமா?

ஒரு மருத்துவர் எப்போதுமே நோயாளியை பார்த்து விட்டுதான் முடிவு செய்ய வேண்டும். எவ்வளவு சீரியஸ் கேஸாக இருந்தாலுமே ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை அழைத்து வரும்போது அவர்களை முழுமையாக பரிசோ தனை செய்து காயங்களைக் கவனித்துப் பார்க்க வேண்டும். அவை சாதாரண காயங்களாக இருந்தால் அதற்கு முதலு தவி செய்துவிட்டு காத்திருக்கச் சொல்லி அறிவுறுத்தலாம். அவர்களின் அவசரத்திற்கு நாம் துணை போகக் கூடாது.

இன்னொரு முரணான விசயமென்றால் அவசர சிகிச்சை வேண்டி எத்தனை நோயாளிகள் வந்தாலும் அவர்களுக்கென்று அந்த நேரத்தில் ஒரே டாக்டர், ஒரே நர்ஸ்தான் இருப்பார்கள். என்னுடைய பணிக்காலத்தில் பேருந்து விபத்துக்குள்ளாகி முப்பதுக்கும் மேற்பட்டோர் அடிபட்டு வருகிறபோது ஒரு விபத்துப் பிரிவு மருத்துவராக தனியொரு ஆளாக நானும் செவிலியரும் மட்டுமேதான் இருந்து சிகிச்சையளித்தோம். ஆனால் மருத்துவர் அத்தகைய சூழலைக் கைகாட்டிவிட்டு சும்மா இருந்துவிட முடியாதல்லவா? நிலைமை எப்படியிருந்தாலும் வருகிற நோயாளிகளுக்கும், அவர்களின் நோய்களுக்கும் அவசி யம் நாம் முக்கியத்துவம் கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஆனால் அப்படி அவசரப் பிரிவில் நோயாளிகள் நிறைய பேர் வருகிறபோது அதைப் பயன்படுத்தி வேகமாக செல்ல  வேண்டுமென்று காவல்துறையினர் நெருக்கடி கொடுத்து அவர்களுக்குத் தேவையான சான்றிதழைப் பெறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் ஒரு பொறுப்புள்ள மருத்துவ அதிகாரியாக அப்படிக் கொடுக்கக் கூடாது.

அப்படியானால் ஒரு அவசரப்பிரிவு மருத்துவ அலுவல ராக பணியாற்றுபவர் ரிமாண்ட் செய்யப்பட்டு வருகிற வர்களை எப்படித்தான் அணுக வேண்டும்?

அதாவது விசாரணை கைதிகளிடம் ஒரு மருத்துவர் விபத்துப் பதிவேட்டில் முதலில் பதிந்துவிட்டு வெளிப்படை யாகவே சில கேள்விகளைக் கேட்க வேண்டும். என்ன நடந்தது, யாரேனும் அடித்தார்களா என்று கேட்க வேண்டும். அவர்களும் கேட்டால் சொல்லிருப்பார்கள். போலிஸை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு தனியாக அழைத்துப் போய் செவிலியர் ஒருவரையும் வைத்துக் கொண்டும் கேள்விகள் கேட்க மருத்துவருக்கு அதிகாரம் இருக்கிறது. போலீஸ்காரர்கள் என்னதான் சொன்னாலும்கூட நோயா ளியினுடைய நிலைமையைப் பாத்தாலே மருத்துவருக்கு இதுதான் பிரச்சனையெனத் தெரிந்துவிடும். அப்படி யெல்லாம் நடந்திருந்தால் கட்டாயம் அவர்களைக் காப்பாற்றியிருக்க வாய்ப்புகள் இருந்திருக்கும்.

எந்தக் கைதி வந்தாலும் அவர்கள் சொல்லுகிற வார்த்தைகளைத்தான் எழுத வேண்டும். போலீஸ்காரர்கள் சொல்வதைக் கேட்டு எழுதக் கூடாது. அவர்களுக்கு அடிபட்டிருந்தால் எப்படி அடிபட்டது, யாரால் அடிபட்டது, எந்த ஆயுதத்தால் தாக்கினார்கள், காயத்தின் தடம் லத்தியி னாலா, அரிவாளினாலா, அது என்ன வகையிலான ஆயுதம் என்பதைப் பற்றியெல்லாம் விரிவாக எழுத வேண்டும். அது என்ன மாதிரியான காயம், எத்தனை காயங்கள் இருக்கின்றன, அதன் நீளம் எவ்வளவு, எத்தனை ஆழமாக இருக்கிறதென்றெல்லாம் கவனமாக எழுத வேண்டும். போலீஸ் அடித்ததாகச் சொன்னால் அதில் எத்தனை போலீஸ் அடித்தார்கள், எதை வைத்து அடித்தார்கள் என்பதைப் போன்ற விவரங்களை வார்த்தை களால் முழுவதுமாக எழுதியிருக்க வேண்டும்.

எழுதி முடித்த பிறகு அந்த மருத்துவர் கைதியை அழைத்து காயங்களைக் குறிப்பிட்டு உள்நோயாளியாக நீங்கள் சேர்ந்து கொள்கிறீர்களா என்று கேட்க வேண்டும். அவர் விருப்பப்பட்டால் கட்டாயம் அனுமதித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் சில ரிமாண்ட் செய்யப்பட்டவர்களில் வேண்டுமென்றே பொய் சொல்லிக் கொண்டு என்னை அடித்துவிட்டார்கள், உள்நோயாளியாக சேருங்கள் என்றும் வருவார்கள். அப்படி மருத்துவமனையில் சேர்ந்து விட்டால் அடித்தவருக்கான முன்ஜாமீன் கிடைக்காது என்பதற்காகவே இப்படி நடந்து கொள்வதும் உண்டு. அப்போது வெளிக் காயங்கள் மட்டும்தான் எங்களுக்குத் தெரிய வாய்ப்பிருப்பதால் அவர்களுக்குத் தேவையான இன்ஷக்ஸனைப் போட்டுவிட்டு அட்மிட் செய்யச் சொல்லி எழுதிவிடுவோம். அப்படி இல்லையென்றால் மேல் சிகிச்சைக்காக செல்வதற்கு பரிந்துரைத்துவிடுவோம். இப்படியும் நடப்பதுண்டு.

காவல்துறை சம்பந்தப்பட்ட நோயாளிகளாக இருந்தால் வருகின்ற காவல்துறையினரோ, மருத்துவத்துறை மேலதிகாரிகளோ அல்லது அரசியல் பிரமுகர்களோகூட குறிப்பிட்ட மருத்துவருக்கு அழுத்தம் கொடுத்து நிர் பந்திக்க வாய்ப்புகள்  இருக்கிறது தானே? அந்த சமயத்தில் ஒரு டாக்டரால் நினைத்ததைச் செய்துவிட முடியுமா?

போலிஸார் அடித்து கூப்பிட்டு வருகின்றபோது இதை யெல்லாம் டாக்டரிடம் சொல்லக்கூடாது என்று மிரட்டித்தான் அழைத்து வருவார்கள். அவர்களுமே போலீஸினுடைய நிர்பந்தத்தில்தான் இருப்பார்கள். ஆனால் மருத்துவர்கள் அவர்களை தனியாக அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டும். சில நேரங்களில் அந்த இடத்தில் அவர்களாக என்ன சொல்லுகிறார்களோ அதை வைத்துத்தான் செய்ய முடிகிறதே தவிர வேறு எதையும் செய்யவும் முடிவதில்லை என்பதும்கூட உண்மைதான்.

 இப்போது இந்த அப்பா, மகன் விசயத்தில் ஆசனவாய் பகுதியில்தான் அதிகமாக அடிபட்டதாகத் தெரிகிறது. இந்த சமயத்தில் அவர்களை ஆடையை முழுமையாக கழட்டச் சொல்லி முழு பரிசோதனை செய்திருந்தால் தானே கண்டுபிடித்திருக்க முடியும்?

அப்படி பரிசோதிக்கிற டாக்டர்களை நானே எனது வாழ்நாளில் பார்த்தது இல்லை. ஆனால் மருத்துவர்கள் அவசியம் என்று நினைக்கிற பட்சத்தில் கட்டாயம் அப்படி பரிசோதிக்க முடியும். ஒருவேளை அவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லையென்று சொன்னாலுமே மருத்துவ ருக்கு சந்தேகம் இருக்கிற பட்சத்தில் கட்டாயம் தனியாக அழைத்துப் போய் பரிசோதிக்க முடியும். அப்படி ஒரு கேஸ் வந்தால் முழுமையாக பரிசோதித்து சிகிச்சைய ளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தி யிருக்கிறது.

 உங்களது முப்பதாண்டுகால அனுபவத்தில் தலைமை மருத்துவராக பணிபுரிந்த காலகட்டத்தில் இதேபோல் ஏதேனும் நிர்பந்தத்தை எதிர் கொண்டிருக்கிறீர்களா?

ஆம். எனக்குமே அப்படிப்பட்ட நிர்பந்தங்கள் பல சமயங்களில் நடந்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு கேஸும் வருகிறபோது எந்த வகையிலெல்லாம் அழுத்தம் கொடுக்க வேண்டுமோ அப்படியெல்லாம் நிர்பந்திக்கத் தான் செய்தார்கள். ஆனால் பின்நாளில் பிரச்சனை வருமென்று தெரிகிற காரணத்தால் அவற்றையெல்லாம் நான் கண்டு கொள்வதில்லை. இதனால் நிறைய சச்சரவு களையும் பிரச்சனைகளையும் என்னுடைய பணிக் காலத்தில் நான் சந்தித்திருக்கிறேன். என்னுடைய சாதியின் பெயரைத் தெரிந்து வைத்துக் கொண்டு இவர் எங்கள் ஜாதிக்காரருக்கு போஸ்ட் மார்டம் செய்யக்கூடாது என்று கூறிய சம்பவம் என் பணி அனுபவத்தில் ஓர் எளிய உதாரணம்.

திரு.ஜெயராஜூம், பென்னிக்ஸூம் இறந்துவிட்டார்கள். இனிவரும் காலங்களில் இந்த மாதிரியான அசம்பா விதமான சம்பவங்களுக்கு மருத்துவத்துறையினர் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்படாமல் இருக்க தீர்வாக நீங்கள் நினைப்பது?

ஒரு டாக்டருக்கு ஒரு ரிமாண்ட் கேஸை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று இன்றுவரையிலும் மாநில அரசு முறையாக பயிற்சியின் மூலம் சொல்லிக் கொடுக்கவே இல்லை. ஒரு மருத்துவர் அரசு வேலையில் சேரும்போதே துறை அதிகாரியாக இருப்பவர்கள் குறிப்பாக இணை இயக்குநர் வந்து வகுப்புகள் எடுக்க வேண்டும். விபத்துப் பதிவேடு என்றால் என்ன, அதை எப்படி பதிவு செய்ய வேண்டும், போலீஸிடம் மருத்துவரும், மருத்துவரிடம் போலீஸூம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அந்த டாக்டருக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கிறது என்பதையெல்லாம் பயிற்சியாக கொடுத்தார்க ளென்றால் இப்படியான அபத்தங்கள் கட்டாயம் ஏற்படாது. இப்படியெல்லாம் மருத்துவர்களுக்கு முறைப்படி பயிற்சிய ளிக்க வேண்டும் என்பது ஒரு ஆணையாகவே இருக்கிறது.

இவ்வளவு வருடம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற எனக்கும்கூட யாரும் சொல்லித்தரவில்லை. நானாகவே தான் அனுபவத்தின் அடிப்படையில் இதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதற்குள்ளாக பல்வேறு பிரச்சனையில் மாட்டிக் கொள்ள வேண்டி யிருக்கும். அப்படித்தான் அந்த மருத்துவருக்கும் நடந்தி ருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய காலம் மாறி னாலும் இப்படியான அவலங்கள் இன்னமும் மாறியபா டில்லை. இனிவரும் காலங்களிலாவது இந்த சாத்தான் குளம் சம்பவத்தைப் போல இனியொரு அசம்பாவிதம் நடக்காமலிருக்க அரசு தன்னாலான எல்லா விசயங்களி லும் கவனம் செலுத்த வேண்டுமென்பதையும் கடைசியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

 

;