தமிழகம்

img

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கெரோனா

தமிழகத்தில் இன்று  மேலும் 7 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
விழுப்புரத்தில்  3 பேருக்கும் மதுரையில் 2 பேருக்கும்  திருவண்ணா மலை மற்றும் சென்னையில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 7 பேரில் 5 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவர். 
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.  

தில்லி மாநாட்டில் பங்கேற்று ராசிபுரம் திரும்பிய 6 பேர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும் தில்லி மாநாட்டில் பங்கேற்ற 501 தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். 

;