தமிழகம்

img

சென்னையில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் 

சென்னையில் இன்று மாலை அல்லது இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, நாகை, காரைக்கால், திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும். 
கடந்த 24 மணி நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ., மழையும், வேலூர் மாவட்டம் கலவையில் 5 செ.மீ., மழையும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 4 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது,'' என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 

;