தமிழகம்

சுற்றுலாதலங்களில் அதிகரித்துள்ள  பயணிகளின் வருகை

சென்னை, மே 26-சுட்டெரிக்கும் வெயில், கோடை விடுமுறை நாளையொட்டிதமிழகத்திலுள்ள சுற்றுலாதலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் ஒக்கேனக்கலில் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் வியாபாரிகளும், பரிசல் ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் ஏற்காட்டில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர் படுக்கைகளை கண்டு ரசித்தனர்.ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள கொடிவேரி அணையில், சுற்றுலா பயணிகளின் குவிந்தனர். அருவி போல்கொட்டும் கொடிவேரி அணை நீரில், நீராடி வெப்பத்தை தணிக்கும் சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்தும், வறுத்தமீன்களை சுவைத்தும் மகிழ்ந்தனர். குழந்தைகளை மகிழ்விக்கஅங்கு பூங்கா வசதியும் செய்யப்பட்டுள்ளதால், ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாபயணிகளுக்கு கொடிவேரி அணை முக்கிய சுற்றுலா தலமாக மாறிவருகிறது. 

;