தலையங்கம்

img

அடங்காப் பசி...

 கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படை யில் பாஜகவே ஆட்சியமைக்க அழைக்கப் பட்டது. அதன் தலைவர் எடியூரப்பா முதல்வ ராக பதவியேற்றார். ஆனால் அவரால் பெரும் பான்மையை நிரூபிக்க முடியாமல் நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வராமலேயே கண்ணீர் விட்டபடி அவையை விட்டு வெளியேறினார்.  இதையடுத்து காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டாக ஆட்சியமைக்க உரிமை கோரின. முதல்வராக ம.ஜ.த தலைவர் குமாரசாமியும் துணை முதல்வராக காங்கிரசின் ஜி.பரமேஸ்வரும் பதவியேற்றனர். இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதில் பாஜக குறியாக இருந்து வந்தது. அதற்காக பல்வேறு சதி வேலைகளிலும் ஈடுபட்டது.  இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜக அணி வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும் தன்னுடைய வேலையில் தீவிரம் காட்டியது. கர்நாடக மாநில காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தே தீரும் என்று பாஜக தலைவர்கள் பேசி னர். அதற்கான கைங்கரியங்களை செய்யத் துவங்கினர். பல்வேறு பேரம் பேசல்கள் நடந்தன. அவர்களது வலையில் சிலர் சிக்கினர்.  இதனால் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் 13 பேர் ராஜினாமா செய்தனர். உடனே அவர்கள் பாஜகவினரால் மும்பைக்கு கொண்டு செல்லப் பட்டனர். உடனே மாநில அரசு பெரும்பான் மையை இழந்துவிட்டது என்றும் ஆட்சி கவிழ்ந்தால் மீண்டும் ஆட்சியமைக்க நாங்கள் உரிமை கோருவோம் என்றும் பாஜக தலை வர்கள் பேட்டியளித்தனர். இந்நிலையில், அதிருப்தியாளர்களை சமா தானப்படுத்த காங்கிரஸ் - மஜத தலைவர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். அதே சமயம் மேலும் சிலரை வளைக்க பாஜகவும் முட்டி மோதியது. அதில் மேலும் சிலர் சிக்கினர். இதனால் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, சபாநாயகர் விரைவில் தனது முடிவை அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கோ, கர்நாடகத்தில் நிலவும் பிரச்சனைக ளுக்கும் மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று கூறி எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை வெளிப்படுத்தினார். நாங்கள் சந்தியாசிகள் அல்ல என்றும் ஆட்சியமைக்க உரிமை கோருவோம் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார். ஆட்சியில் இல்லாமல் பாஜகவினரால் இருக்க முடியவில்லை. எப்படியாவது ஆட்சியை பிடித்தே தீருவோம் என்று அடங்கா வெறியுடன் அலைகின்றனர். எனினும் அவர்களது முயற்சிக்கு தற்காலிக பின்னடைவாக சபாநா யகர், எம்எல்ஏக்களின் கடிதங்கள் முறைப்படி யாக இல்லையென்றும் எனவே அவர்கள் நேரில் விளக்கமளிக்க வேண்டுமென்றும் கூறி யிருக்கிறார். இது பாஜகவினரின் கவிழ்ப்பு முயற்சி க்கு தடையாக இருக்கிறது. கொல்லைப்புற வழியாக பாஜக ஆட்சியைப்பிடிக்க முயல்வது ஜனநாயகத்தை இழிவுபடுத்துவதாகும்.

;