தலையங்கம்

img

வேலையில்லா  இளைஞர்களின் அவல நிலை

 சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் ஓட்டுநர் பணிக்கு 2013ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கு அடிப்படை கல்வித் தகுதியாக டிப்ளமோ படிப்பு நிர்ணயிக்கப்பட்டி ருந்தது.ஆனால் நாட்டில் பல ஆண்டுகளாக வேலையில்லா திண்டாட்டம் நிலவும் சூழ்நிலையில் துப்புரவு பணிக்கு கூட எம்ஏ,எம்பிஏ படித்த வர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இதே போன்று தான் மெட்ரோ ரயில் ஓட்டுநர் பணிக்கு பொறியியல் படிப்பை முடித்திருந்த ஆர்.லக்ஷ்மி பிரபா விண்ணப்பித்தார். அவர் தேர்வு செய்யப்பட்ட போதிலும் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை விட அதிக தகுதியை அவர் கொண்டிருந்ததால் தேர்வு நடைமுறையிலிருந்து விலக்கி வைக்கப் பட்டார்.  வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித் துள்ள இன்றைய காலகட்டத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் செயல்பாடு மனுதாரரின் உரி மையை பறிக்கும் வகையில் உள்ளபோதும், கூடுதல் தகுதியுடையவர் பணி நியமனம் கோர உரிமையில்லை என்று நீதிமன்றம் கூறி விட்டது. அதே நேரத்தில் நாட்டில் வேலை யில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதை மறுப்ப தற்கில்லை என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டி யுள்ளார். இதுதான் நாட்டின் எதார்த்த நிலை.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடிப்பேருக்கு வேலைதருவோம் என்று முழங்கி யவர்கள் அதை செய்யவில்லை. இருக்கிற வேலையை பறிக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றனர். தமிழக அரசோ மாநில அரசில் காலியாக உள்ள பணி யிடங்களுக்கு ஆட்களை நியமிக்காமல் அந்த இடங்களை சரண்டர் செய்கிறது. அரசுத் துறை களில் ஆட்குறைப்பு செய்வதற்கென்றே அர சாணை 56ஐ செயல்படுத்தி வருகிறது.  வேலைவாய்ப்பு அலுவலகங்களில் லட்சக்க ணக்கான இளைஞர்கள் பதிவு செய்து, வேலைக் காக காத்திருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்ந் தெடுக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அளவிற்கு குறைந்திருப்பதாக பேரவை யில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அதன் ஆண்ட றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு  வரை கடந்த ஐந்தாண்டுகளில் தேர்வாணை யத்தின் மூலமாக 53 ஆயிரத்து 883 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2013-14 ஆம் ஆண்டில் 15 ஆயிரத்து 668 பேர் தேர்வு செய்யப்பட் டிருந்த நிலையில், 2017 -18 ஆம் ஆண்டில் 8 ஆயிரத்து 117 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அளவிற்கு குறைந் துள்ளது. அதே சமயம் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 2014 - 2015 ஆம் ஆண்டில் 13 சத வீதமாக இருந்த நிலையில், 2017 - 2018 ஆம் ஆண்டில் 28 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது அரசின் புள்ளிவிவரம்.உண்மை நிலை இதைவிட மோசமாக உள்ளது.வேலையின்மை என்பது ஒரு எரிமலைபோன்றது. அதன்சீற்றத்தை மத்திய மாநில ஆட்சியாளர்கள் உணரவேண்டும். இல்லையெனில் விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டியிருக்கும்.

;