தேசம்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- புதிய இந்தியாவை உருவாக்குவோம்.
ச.சா - அதனாலதான பயமாயிருக்கு..!!
*****
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி :- பதவி விலக விரும்பினேன்.
ச.சா - முழுசா பாஜககிட்ட விட்டுட்டுதான போவீங்க..?!?
*****
செய்தி :- பாஜக மீண்டும் வெற்றி பெற்றதால் காங்கிரஸ் கட்சி தொண்டர் மொட்டை..
ச.சா - மக்களுக்கு பாஜக “மொட்டை” அடிக்குறது தொடருமே..?!?
*****
செய்தி :- வி.ஐ.பி. அந்தஸ்தை எதிர்பார்க்க வேண்டாம் என்று புதிய எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை.
ச சா - எந்தப் பதவிலயும் இல்லாத உங்க சகோதரர்கிட்டயும் சொல்வீங்களா, மோடிஜி...?!?
 

;