தேசம்

img

கொரோனா வைரஸ் : இந்தியாவில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு

உலகின் 200 நாடுகளுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த நோய் தொற்றின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 37,820 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,85,807 ஆக அதிகரித்துள்ளது. 1,65,659 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,250ஐ தாண்டியுள்ளது. இதில் 102 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இன்று அதிகாலை கேரளாவில் 2 ஆவதாக 68 வயது முதியவர் ஒருவர், கொரோனா தொற்றால் பலியாகி உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.  அதே போல், மேற்கு வங்காளத்தில் 3 ஆவதாக ஒருவர் பலியாகி உள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
 

;