தேசம்

img

பாலியல் வழக்கில் பாஜக முன்னாள் அமைச்சர் கைது 

சட்டக்கல்லூரி மாணவி அளித்த பாலியல் பலாத்கார வழக்கில் பாஜக முன்னாள் அமைச்சர் சாமியார் சின்மயானந் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் முன்னாள் மத்திய  அமைச்சரும்  பாஜக தலைவருமான  சின்மயானந்த் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஷாஜகான் பூர் சட்டக்கல்லூரி மாணவி புகார் கூறினார். இதுதொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி கூறும்போது, “மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நான் வாக்குமூலம் கொடுத்து 2 நாட்கள் ஆகியும் இன்னும் சின்மயானந்தை கைது செய்யவில்லை. அரசு நான் சாக வேண்டும் என்று காத்திருக்கிறதா? சின்மயானந்தை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் நான் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வேன்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் சாமியார் சின்மயானந்த் கைது செய்யப்பட்டுள்ளார். 
 

;