தேசம்

img

‘தூய்மை இந்தியா’ திட்ட கழிப்பறை கட்டியதில் ஊழல் விசாரணைக்கு உத்தரவு!

லக்னோ, ஏப்.9-

‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கு கழிப்பறை கட்டிக்கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். மோடியின் ஏனைய திட்டங்களைப் போலவே, இந்த திட்டமும் வெற்றிபெறவில்லை.இதனிடையே, உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில், கழிப்பறை கட்டிக் கொடுக்க, பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை கழிப்பறைகள் முறையாக கட்டப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து கழிப்பறை கட்டுவதில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும் எனஉத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. கழிப்பறை கட்டித்தரும் விஷயத்தில், பல நூறு கோடிரூபாய் தவறான முறையில் கையாடப்பட்டுள்ளது; இதில்நடந்துள்ள ஊழல் குறித்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுல்தான்பூர் மாவட்ட வளர்ச்சிதிட்ட அலுவலர் மதுசூதன் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

;