தேசம்

முதலமைச்சராக தொடர விரும்பவில்லை: மம்தா பானர்ஜி

கொல்கத்தா, மே 26-மேற்கு வங்க முதலமைச்சராக தொடர விரும்பவில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல்களால் இனி பயன் இருக்கப் போவதில்லை என்றார். வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாட்டமைப்பில் மாறுதல்கள்செய்யப்பட்டுள்ளதாகவும், பா.ஜ.க.வினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டிய அவர், பிரச்சனைகளை உச்சநீதிமன்றத்துக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் கொண்டு சென்றும் பலன் இல்லை என்றார்.ஊடகங்களையும், நீதித்துறையையும் கூட மத்திய அரசு கட்டுப்படுத்திவிட்டதாகத் தெரிவித்த அவர், சாதிக்கமுடியாத முதலமைச்சராக தொடர விருப்பமற்ற நிலையில், பதவி விலக கட்சியினர் அனுமதிக்கவில்லை என்று அவர்தெரிவித்தார்.

;