தேசம்

img

பாஜகவை விளாசிய பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா முப்தி மோடியே இந்தியா அல்ல; இந்தியாவும் மோடி அல்ல

ஸ்ரீநகர், ஏப்.15-ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், கதுவாபகுதியில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிறன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ஜம்மு - காஷ்மீரை முப்தி, அப்துல்லா குடும்பங்கள் 3 தலைமுறைகளாக ஆண்டு விட்டதாகவும், தற்போது நாட்டைத் துண்டாடுவதற்கு முயற்சித்து வரும் அவர்களை வெற்றிபெற விட மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி காட்டமான முறையில் பதிலளித்துள்ளார்.பிரதமர் மோடி தன்னை நாட்டுக்குஒப்பாக, இணையாக வைத்துக் கொண்டு, மக்களை தவறாக வழிநடத்துவதாகவும், தேசத்தில் உள்ள ஒவ் வொரு குடிமகனுக்கும் நாடு குறித்த தேசப்பற்றும், கடமையும் இருக்கிறது என்பதை மறந்துவிட்டு, தனக்கு மட்டுமே நாட்டைப் பற்றிய சிந்தனை, தேசப்பற்று இருக்கிறது என்பதுபோல தோற்றம் காட்டுவதாகவும் விமர் சித்துள்ளார். “ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், நாட்டுக்காக உண்மையாக இருக்கிறார்களே தவிர, மோடிக்காக அல்ல” என்பதையும், “மோடியே இந்தியா அல்ல;இந்தியாவும் மோடி அல்ல என்பதையும் எங்களை விமர்சிப்பவர் உணரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றை பிரிவினைவாத கட்சிகள் என்று மோடிகுற்றம் சாட்டியிருப்பதற்கும் பதிலளித்துள்ளார்.


“நான் பிரிவினைவாத கட்சி நடத்துகிறேன் என்றால், அப்புறம் எதற்காகதேர்தலுக்கு முன், பாஜக தலைவர்களைஅனுப்பி என்னிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்?” என்று பிடியை இறுக்கியுள்ள மெகபூபா முப்தி,“பாஜக பொதுவாக இப்படி குற்றம் சாட்டுவதும், தேர்தலுக்குப் பின், அதே கட்சிகளுடன் கூட்டணி சேருவதும் பாஜகவின் வாடிக்கை” என்று விமர்சித்துள் ளார்.கடந்த 1999-ஆம் ஆண்டில் தேசிய மாநாட்டுக் கட்சியுடனும், 2015-ஆம் ஆண்டில் பிடிபி கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைத்ததை மோடிக்கு அவர் நினைவுபடுத்தியுள்ளார்.பாஜக-வின் தேர்தல் அறிக்கையை ‘நச்சு அறிக்கை’ என்று சாடியிருக்கும் மெகபூபா, அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின்மீது பாஜக-விற்கு நம்பிக்கை இல்லை என்றால், பின் ஏன் அந்த அரசமைப்புச்சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டு ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும்? என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவும், பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத் துள்ளார்.


‘மிர் பஹரி தால்’ என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கும் பரூக் அப்துல்லா, “தேசத்தைசாதி ரீதியாக, மத ரீதியாக பிளவுபடுத்தும் எண்ணத்துடன் இருக்கும் அமித் ஷாவும், மோடியும்தான் இந்தநாட்டு மக்களின் மிகப்பெரிய எதிரிகள்”என்று குறிப்பிட்டுள்ளார். எந்த நம்பிக்கையுள்ளவர்களும் வாழ்வதற்கான உரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிறது; அந்த அரசமைப்புச் சட்டம்தான் காஷ்மீர்மாநிலத்துக்கு 35ஏ, 370 பிரிவின் கீழ்சிறப்பு உரிமைகளையும் வழங்கிஇருக்கிறது; ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தையே பாஜக மாற்ற முயற்சிப்பதாகவும் பரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.“மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பேசும்போதும், ஜம்மு - காஷ்மீரில், அப்துல்லா, முப்தி குடும்பத்தாரை விரட்ட வேண்டும் என்று பேசினார்; அதன்பின் முப்தி குடும்பத்தாருடன் கூட்டணி வைத்து அவர்களில் இருவரை முதல்வராக்கினார்; தற்போது 2019ஆம் ஆண்டில் மீண்டும் இரு அரசியல் குடும்பத்தாரையும் விரட்டுவோம் என்று மோடி கூறுகிறார்; ஆனால் இதுவும் மோடியின் வெற்றுப் பேச்சாகவே முடியும்” என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப் துல்லா குறிப்பிட்டுள்ளார்.

;