தேசம்

img

மோடி ஆட்சியில் அவமதிக்கப்படும் பொருளாதார அறிஞர்கள்

புதுதில்லி:
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் வரை இருக்கும் நிலையில், மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் முற்றியதன் காரணமாகவே, விரால் ஆச்சார்யா ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவே உண்மை என்றும் கூறப்படுகிறது.ஏனெனில், ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமையில், மத்திய பாஜக அரசுதலையிடுகிறது என்ற குற்றச்சாட்டை முதன்முதலில் மக்கள் முன்பு வைத்தவர் விரால் ஆச்சார்யா ஆவார்.

“மத்தியில் ஆளும் மோடி அரசானது,பொருளாதாரத்தில் ‘டி-20’ கிரிக்கெட் ஆடமுயற்சிப்பதாகவும், இது நீண்டகாலம் நிலைக்காது” என்றும் கடந்த 2018 அக்டோபரிலேயே பொதுநிகழ்ச்சி ஒன்றில் விரால் ஆச்சார்யா பேசியிருந்தார்.“சர்வதேச முதலீட்டாளர்களின் (பெருமுதலாளிகளின்) அன்பைப் பெறுவதற்காக, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை, மத்திய அரசு காவுகொடுக்க முயற்சிக்கிறது; கடன் வழங்குவதில் சிலவங்கிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசின் உயர் அதிகாரிகள் தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்து வருகின்றனர். நாட்டின் பரிவர்த்தனை அமைப்புக்கு புதிய ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பதன் வாயிலாக ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை அதிகாரங்களை குறைக்கவும் மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை குறைப்பதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும். கண்மூடித் தனமான நடவடிக்கைகளால் மூலதனச் சந்தைகளில் நம்பகத்தன்மை குறைந்துவிடும்” என்று அவர் கூறியிருந்தார்.

“ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுக்காத அரசுகள், நிதிச் சந்தைகளின் கோபத்துக்கு ஆளாகி, பொருளாதாரத் தீயை மூட்டி, ரிசர்வ் வங்கியின் அதிகாரங்களை குறைத்ததற்காக ஒரு
நாள் வருத்தப்படும். சட்டத்தை மீறிசெயல்படும் செயல்களுக்கு மத்திய அரசு உரிய விலை கொடுக்க வேண்டியதுஇருக்கும்” என்றும் விரால் ஆச்சார்யா பகிரங்கமாக எச்சரித்திருந்தார்.
ரிசர்வ் வங்கியின் கையிருப்பு நிதி ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் கோடியைக் கேட்டு, மத்திய அரசு நிர்ப்பந்தம் அளித்துவந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே விரால் ஆச்சார்யா
இவ்வாறு கூறியிருந்தார். அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாமல் இருந்தபோது, அவருக்குப் பதில்விரால் ஆச்சார்யா துணிந்து உண்மைகளை போட்டுடைத்தார்.

அப்போதே விரால் ஆச்சார்யாவுக்கு, மத்திய பாஜக அரசின் நெருக் கடி ஆரம்பித்து விட்டது.“ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலும், அவரது சக அதிகாரிகளும் மத்தியஅரசு கூறுவதைத்தான் கேட்க வேண்டும்;இல்லாவிட்டால் தாராளமாக வேலையை விட்டுச் செல்லலாம்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான அஸ்வினி மகாஜன் தெரிவித்தார். “உர்ஜித் படேல், தனக்கு கீழுள்ள அதி
காரிகளை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்” என்றும் அவர் மிரட்டல் விடுத்தார். அதேகாலகட்டத்தில், ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற ஆர்எஸ்எஸ்-காரர்கள், ரிசர்வ் வங்கியின் இயக்கு
நர்களாக மத்திய அரசால் நியமிக்கப் பட்டனர். உர்ஜித் படேல், விரால் ஆச் சார்யா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நெருக்கடி தருவதற்காக இந்த நியமனங்கள் செய்யப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், கடந்த 2018 டிசம்பர் 10-ஆம் தேதி, தனதுபதவிக்காலம் முடிவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்தார். 

அதன்தொடர்ச்சியாகவே, உர்ஜித்படேல் ராஜினாமா செய்து, சரியாக 6 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில்,ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரானவிரால் ஆச்சார்யாவும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளார்.மத்தியில் கடந்த 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, ரிசர்வ் வங்கியின்முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பதவிநீட்டிப்பு தரப்படாமல் கடந்த 2016 செப்டம்பர் 3-ஆம் தேதி வெளியேற் றப்பட்டார். ரகுராம் ராஜனுக்குப் பதில் நியமிக்கப்பட்ட உர்ஜித் படேல் 2018 டிசம்பரில் அவராகவே பதவியைராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார். அவர் வெளியேறிய மறுநாளே,பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த சுர்ஜித் பல்லா, ஓட்டம் பிடித்தார். முன்னதாக 2017 ஆகஸ்டில், நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியாவும், 2018 ஜூனில், நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தஅரவிந்த் சுப்பிரமணியனும் பதவியைராஜினாமா செய்துவிட்டு வெளியேறினர். இந்த வரிசையிலேயே தற்போது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளார்.

;