தேசம்

img

‘வஜ்ராசன யோகா செய்தால்; விபத்தை தவிர்க்கலாம்’ உ.பி. பாஜக அமைச்சர் ஆராய்ச்சி!

புதுதில்லி:
தில்லி - லக்னோ நெடுஞ்சாலையில் ஆக்ரா அருகே பேருந்து ஒன்றுபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 29 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், “வஜ்ராசன யோகா செய்தால்; விபத்தை தவிர்க்கலாம்” என்று உத்தரப்பிரதேச மாநில பாஜக அமைச்சர் சுதந்திர தேவ் சிங், ஓட்டுநர்களுக்கு மிக முக்கியமான ‘ஆலோசனை’ ஒன்றை வழங்கியுள்ளார்.“நான் ஒரு ‘யோகா’ வீடியோவைப் பார்த்தேன். அதில், ஓட்டுநர்கள், திருப்தியான சாப்பாட்டுக்கு (புல் மீல்ஸ்) பின்னர், 30 நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நன்றாக சாப்பிட்ட பின்னர் 20 நிமிடங்கள் வஜ்ராசன நிலையில் இருக்க வேண்டும். பின்னர் வாகனத்தை எடுக்கலாம். அவ்வாறு செய்தால் விபத்தைத் தவிர்க்கலாம்” என்று சுதந்திரதேவ் சிங் கூறியுள்ளார்.ஆக்ரா விபத்து குறித்து, சுதந்திர தேவ் சிங் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அப்போது தான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

;