செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

தேசம்

img

அமெரிக்க கொடியை போட்டு இந்திய கடற்படைக்கு வாழ்த்து

புதுதில்லி:
பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, தனது டுவிட்டர் பக்கத்தில், அமெரிக்க கொடியுள்ள கப்பல் படத்தைப் போட்டு, இந்திய கடற்படைத் தினத்திற்கு வாழ்த்து கூறியது கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.இந்திய கடற்படை தினம்டிசம்பர் 4-ஆம் தேதி கொண் டாடப்பட்டது. இதற்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், நானும் வாழ்த்து தெரிவிக்கிறேன் பேர்வழி என்று கிளம் பிய தில்லி வடகிழக்கு தொகுதியின் பாஜக எம்.பி. மனோஜ்திவாரி, டுவிட்டர் பக்கத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், போர்க்கப்பல் களின் படத்தைப் போட்டு, அதனுடன் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரின் படங்களையும் இணைத்து வாழ்த்துகூறியுள்ளார்.ஆனால், இந்திய போர்க்கப்பல் என்று திவாரி பதிவேற்றியிருக்கும் கப்பல் படத்தில் அமெரிக்கக் கொடி பறப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தியக் கொடிக்கும் அமெரிக்கக் கொடிக்கும் வித்தியாசம் தெரியாதவர் எம்.பி.யானால் இப்படித் தான் நடக்கும் என்று சமூகவலைத்தளவாசிகள் ஒருபுறம் கிண்டலடிக்க, நாட்டின் பாதுகாப்புத்துறை சார்ந்த விஷயத்தில், மனோஜ் திவாரி பாஜக-வின் தேர்தல் சின்னமான ‘தாமரை’யை திணிப்பதா? என்றும் பலர் கண்டனங்களைத் தெரிவித் துள்ளனர்.

;