தேசம்

img

மோடி அரசுக்கான மக்களின் ஆதரவு ஒரே மாதத்தில் 22 புள்ளிகள் சரிந்தது!

புதுதில்லி, ஏப்.15-மத்திய பாஜக அரசுக்கான ஆதரவுப் புள்ளி, ஒரே மாதத்தில் 22 புள்ளிகள் வரை குறைந்திருப்பதாக சிவோட்டார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. சிவோட்டார் நிறுவனம், அரசின் செயல்பாடுகள் குறித்த மக்களின் கருத்தைக் கேட்டு, அதன் முடிவுகளை மாதத்தோறும் வெளியிட்டு வருகிறது. ‘மிகவும் திருப்தி, ஓரளவு திருப்தி, திருப்திஇல்லை, சொல்ல இயலவில்லை’ என்ற நான்கு பதில்களைக் கொடுத்து, அவற்றில் ஒரு பதிலை மக்களிடமிருந்து பெற்று,இந்த ஆய்வை நடத்தி வருகிறது.இதன்படி, 2019-ஆம் ஆண்டின்ஆரம்பத்தில், பாஜக அரசுக்கான மக்களின் ஆதரவுப் புள்ளி 32.4 என்று இருந்துள்ளது. அந்த மாதமே அது 40 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. புல்வாமா சம்பவம், பாலகோட் தாக்குதல் என அடுத்தடுத்த நிகழ்வுகளால், இந்த ஆதரவுப் புள்ளிகள் பலமடங்கு உயர்ந்து 62.06 புள்ளிகள் வரை சென்றுள்ளது.இந்நிலையில், மார்ச் 7-ஆம் தேதி 51.32 புள்ளிகளாக சரிந்த ஆதரவுப் புள்ளிகள், மார்ச் 12 முதல் ஏப்ரல் 12 வரையிலான காலத்தில், 12 புள்ளிகள் வரை குறைந்து ஏப்ரல் 12-ஆம் தேதி 43.25 புள்ளிகளாக சரிவைச் சந்தித்துள்ளது. அதாவது ஒரே மாதத்தில் மோடி அரசுக்கான 22 ஆதரவுப் புள்ளிகள் குறைந் துள்ளன.இன்னும் 6 கட்டத் தேர்தல்கள் இருக்கும் நிலையில், பாஜக அரசுக்கான ஆதரவுப் புள்ளிகள் குறைந்துகொண்டே செல்வது, பாஜக தலைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

;