செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

தேசம்

img

பிபிசிஎல் தனியார் மயத்தால் எரிவாயு மானியத்திற்கு ஆபத்து!

புதுதில்லி:
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனத்தைத் தனியாருக்கு விற்கும் மோடி அரசின் முடிவுக்கு, நாடாளுமன்றத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளது.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், செவ்வாயன்று நாடாளுமன்ற அவை விதி 377-ஆவது பிரிவின்கீழ் அவசரப் பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஏ.எம். ஆரிப், இதுதொடர்பாக பேசியிருப்பதாவது:

பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்-டின் பங்குகளில் 53.2 சதவிகிதத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்திட மத்திய அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முடிவு, அதன் ஊழியர்கள் மத்தியிலும், சமூகத்தின் மத்தியிலும் கடும்விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நிறுவனம் இதுவரையிலும் மிகவும் லாபகரமாகவே இயங்கி வந்திருக்கிறது. கடந்தஐந்தாண்டுகளில் மட்டும் 50 ஆயிரம்கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியிருக்கிறது. பிபிசிஎல் நிறுவனம், கேரள மாநிலஅரசுடன் சேர்ந்து, பல கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறது. அவ்வாறிருக்கையில் இந்நிறுவனத் தைத் தனியாரிடம் ஒப்படைத்தால் இந்தநடவடிக்கைகள் அனைத்தும் நின்றுவிடும். பிபிசிஎல் நிறுவனத்தைத் தனியாரிடம் தாரை வார்ப்பது, கேரளாவில் கொச்சின் சுத்திகரிப்பு நிலையத்தின் துணை உற்பத்திப் பொருட்களைப் பயன்படுத்தி, மேற்கொள்ளப்பட்டு வரும்கேரளாவில் உள்ள பெட்ரோகெமிக்கல் பூங்காவையும் (petrochemical park) கடுமையாகப் பாதிக்கும். தனியார்மயம் வேலை வாய்ப்புகளையும் பறித்திடும். இப்போது சமையல் எரிவாயுவுக்கு அளிக்கப்பட்டுவரும் மானியங்கள் எதிர்காலத்தில் ஒழித்துக்கட்டப்படும். எனவே, மத்திய அரசாங்கம் இதனைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளைக்கைவிட வேண்டும் என்று ஏ.எம். ஆரிப்பேசியுள்ளார். (ந.நி.)

;