தேசம்

தபோல்கர் கொலையில் வலதுசாரி அமைப்பின் வழக்கறிஞர் கைது

புதுதில்லி, மே 26-பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில்,வலதுசாரி அமைப்பின் வழக்கறிஞர் சஞ்ஜீவ் புனலேகரை சிபிஐ கைது செய்துள்ளது. புனே நகரில் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று காலை நடைபயிற்சி சென்றிருந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்து ஜனாஜகிருட்டி சமிதி மற்றும் தபோல்கரால் நிறுவப்பட்ட மகாராஷ்டிரா ஆந்தாஸ்ரத்தா நிர்மூலன் சமிதி இடையேயானசித்தாந்த வேறுபாட்டால் தபோல்கர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 2 பேரை சிபிஐஅதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இந்த நிலையில் மே 25 மதியம் 3.45 மணியளவில் தபோல்கர்கொலை வழக்கில் தொடர்புடையதாக சனாதன் சன்ஸ்தாஅமைப்பின் வழக்கறிஞர் சஞ்ஜீவ் புனலேகர் மற்றும் விக்ரம் வைபவ் என்பவரை சிபிஐயினர் கைது செய்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற பிரக்யா சிங் தாகூருக்கு, மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்ஜீவ் புனலேகர் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;