தேசம்

img

திப்பு சுல்தான் ஜெயந்தி ரத்தா? முடிவை பரிசீலனை செய்ய பாஜக அரசுக்கு உத்தரவு

பெங்களூரு:
திப்பு சுல்தான் பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்வது என்ற முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு, கர்நாடக அரசுக்கு, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மைசூரு மன்னரான மாவீரர் திப்பு சுல்தான், பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் ஆவார். அனைத்து மதத்தினரையும் அரவணைத்து நல்லாட்சி நடத்தியவர் என்று வரலாற்றில் இடம்பெற்றவர். எனவே, அவரின்பிறந்தநாள், கர்நாடக மாநிலத்தில்ஆண்டுதோறும் நவம்பர் 10-ஆம்தேதி, அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு அறிவித்தது. அதன்படி கடந்த சில வருடங்களாக திப்பு ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டும் வந்தது.ஆனால், தற்போது பாஜகஆட்சிக்கு வந்துள்ள நிலையில்,திப்பு சுல்தான் ஜெயந்தி அரசுவிழாவாக கொண்டாடப்பட மாட் டாது என்பதுடன், திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் முதல்வர் எடியூரப்பா அறிவித்தார். திப்புசுல்தான் பற்றிய பாடங்களையும் பாடநூல்களில் இருந்து நீக்கப் போவதாக அறிவித்தார். இதற்கு கர்நாடக எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எடியூரப்பாவின் அறிவிப் புக்கு தடைக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பொதுநலவழக்கும் தாக்கல் செய்யப்பட் டது. இதை விசாரித்த நீதிமன்றம்,திப்பு சுல்தான் ஜெயந்தி ரத்துஎன்ற முடிவை கர்நாடக மாநிலஅரசு மறு பரிசீலனை செய்யுமாறுஉத்தரவிட்டுள்ளது. மேலும், திப்பு ஜெயந்தி கொண்டாடுவோருக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமைஎன்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

;