தேசம்

img

ஒரே குடும்பத்தை சேர்ந்த 25பேருக்கு கொரோனா

மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தில் மட்டும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு 225 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் சங்லி மாவட்டம் இஸ்லாம்பூரை சேர்ந்த ஒரு குடும்பத்தில், 4 பேர் சவூதியில் இருந்து வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு கடந்த 23-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாக குடும்பத்தில் உள்ள 2 வயது சிறுவன் உள்ளிட்ட  21 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 
ஒரே குடும்பத்தில் மட்டும் கொரோனாவால் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை அதிகாரிகளுக்கும் மகாராஷ்டிர மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சவுத்ரி கூறுகையில், 'இஸ்லாம்பூர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும் என சந்தேகிக்கப்படும் 325 பேர் இருக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கொரோனா தடுப்பு மண்டலம் அமைத்துள்ளோம். சமூக பரவலாக கொரோனா இன்னும் மாற்றம் அடையவில்லை.' என்று தெரிவித்தார்.

;