தேசம்

img

பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை!

லக்னோ:
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்த ஆர்எஸ்எஸ் பிரமுகரை, மாணவியின் தந்தையும், சகோதரர்களும் சேர்ந்து வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர் நகர் அருகே உள்ள கர்வாரா கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று இந்த கொலை நடந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பங்கஜ்.ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பணியாற்றிவரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை பின் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்துள்ளார். பலமுறை எச்சரித்தும் பங்கஜ் தனது துன்புறுத்தலை நிறுத்திக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பங்கஜின் பாலியல் தொல்லை குறித்து, பாதிக்கப்பட்ட பெண், தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை கவர்பால், தனது மகன்கள் மோனு மற்றும் பிரமோத்துடன் இணைந்து, ஆர்எஸ்எஸ் பிரமுகர் பங்கஜை, கடந்த சனிக்கிழமையன்று மாலை வெட்டிப் படுகொலை செய்தனர். தற்போது, இப்படுகொலை தொடர்பாக மாணவியின் தந்தை கவர்பாலையும், அவரது ஒரு மகனையும் போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

;