தேர்தல் 2019

img

எங்கே அந்த ஆயிரம் கோடி?

தற்போதைய மத்திய மற்றும் தமிழகத்தை ஆளும் மாநில அரசுகள் தங்கள் மீதான தவறுகள், ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க பொதுமக்களிடம் மதரீதியான குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. பொதுமக்களிடம் தவறான தகவல்களை கூறி திசை திருப்புகின்றனர். பதவி ஆசைக்காகவே அவர்கள் இவ்வாறு செய்கின்றனர்.  திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டி யன் ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். ஆனால் தமிழகத்தின் எந்த மாவட்டத்திற்கும் அந்த தொகை வரவில்லை. ஸ்மார்ட்சிட்டி என்ற பெயரில் அதிமுகவின் அமைச்சர்களும், ஆளுங்கட்சி பிரமுகர்களும் கமிசன்கள் பெற்றுள்ளனர். தேனி தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.

;