செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

பேஸ்புக் உலா

img

ஆம் இது பெரும் பூந்தோட்டம் தான் - கருமலையான்

ஹோலி கொண்டாட்டத்தில் வடபுலத்து மக்கள்...

"ஹோலி"- குறித்து எந்த தொடர்பும் அற்ற என்னை காலையில் நமது தோழர்களின் குழந்தைகள் எழுப்பினர்.

கலர் தண்ணீர் பாய்ச்சி எனது உடம்பெல்லாம் கலர் பூசி ஹோலியை கொண்டாட்ட துவங்கினர்.

டெல்லி படுகொலைகளின் கொடூரம் என் மனதில் நிழலாடுகிறது.

ஆனாலும் அதை அறியாத இந்த பிஞ்சு மனங்களில் சந்தோஷத்தை மதித்து கொண்டேன்.

என்னே எம் தேசம்..
எத்தனை வண்ணங்கள்..
எத்தனை சாமிகள்..
எத்தனை வழிபாடுகள்..
எத்தனை பாஷைகள்..
எத்தனை பழக்க வழக்கங்கள்...

ஆம் இது பெரும் பூந்தோட்டம் தான்..

இங்கு பூக்கள் ஏராளம்.
வாசங்கள் ஏராளம்.
விவாதங்கள் ஏராளம்.
ஆனாலும் ஒன்றானோம்- நவீன இந்தியா ஜனித்ததும், பிரசவித்து பிறப்பெடுத்ததும் அப்படி...
அதனால் ஒன்றானோம்.
இந்த வண்ணங்களை பரஸ்பரம் மதிக்கலானோம்.

;