வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

பொருளாதாரம்

img

மே மாதத்தில் இந்தியாவில் கச்சா எஃகு உற்பத்தி 39 சதவீதம் சரிவு

கடந்த மே மாதத்தில், இந்தியாவில் கச்சா எஃகு உற்பத்தி, 39 சதவீதம் சரிந்துள்ளதாக உலக எஃகு சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், எஃகு உற்பத்தி, தேவை மற்றும் விநியோகம் ஆகியவற்றில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 10.4 மில்லியன் டன்னாக இருந்த எஃகு உற்பத்தி, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 8.65 மில்லியன் டன்னாக குறைந்து, 14 சதவீதம் சரிந்துள்ளது. அதே போல், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 9.02 மில்லியன் டன்னாக இருந்த எஃகு உற்பத்தி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 3.13 மில்லியன் டன்னாக குறைந்து, 65 சதவீதம் சரிந்துள்ளது. இந்த நிலையில், உலக எஃகு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 9.46 மில்லியன் டன்னாக இருந்த எஃகு உற்பத்தி, இந்த ஆண்டு மே மாதத்தில், 5.76 மில்லியன் டன்னாக குறைந்து, மே மாதத்தில் 39 சதவீதம் சரிந்துள்ளது.
 

;