செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

பொருளாதாரம்

img

வீழும் உயிர்கள் ... குதிக்கும் பங்குச் சந்தை... - வி.ரமேஷ்

மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ்  ஊழியர் சங்க பொதுச் செயலாளர் 

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 1,27, 640 பேர் (27.06.2020 வரை) இறந்துள்ளனர் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 25,53,068. அமெரிக்கப் பொருளாதாரம் மிகவும் மோச மாக பாதிக்கப்பட்டுள்ளது. 4 கோடி அமெ ரிக்கர்கள் இந்த நோய்த் தொற்று காலத்தில் வேலையிழந்துள்ளனர். ஆயிரக்க ணக்கான அமெரிக்க மக்கள் நிற வெறிக் கொடுமைகளுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடுகிறார்கள். அமெரிக்க-சீன உறவுகள் மிகவும் சிக்கலாகி கொண்டி ருக்கும் நேரம். அமெரிக்க மக்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுந்து கொண்டிருக்கும் இந்த வேளையிலும் கூட ஜனாதிபதி டிரம்ப், நிதி மூலதனத்தினை விசிறி விடும் பணியில் முழுவதுமாக ஈடு பட்டுள்ளார். அமெரிக்க பங்குச் சந்தைகள் துள்ளிக் குதிக்கின்றன. மேலே ஏறுகின்றன. அமெரிக்க தத்துவவாதியும் அரசியல் நோக்கருமான கர்னல் டொனால்ட் வெஸ்ட் கூறியுள்ளது போல், அமெரிக்கா தனது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் மிகப்பெரிய தோல்வியினை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அமெரிக்கப் பங்குச் சந்தை மிகப் பெரிய அளவில் உயர்வினை பெற்றுள்ளது. கடந்த மார்ச் 23, 2020 க்கு பின்னர், அமெரிக்க  நாஷ்டாக்   பங்குச் சந்தை 40% உயர்வினை கொண்டு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 

கடைந்தெடுத்த கட்டுக்கதை

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி யின் அளவுகோல் பங்குச் சந்தையின் வளர்ச்சி என்கிற வாதம் கடைந்தெடுத்த கட்டுக்கதை என்பது இதன் மூலம் நிரூ பணமாகியுள்ளது.  ஆனால் இந்த நிகழ்வு வேறு ஒன்றையும் உணர்த்தியுள்ளது. நவீன தாராளமயக் கொள்கையின் மைய நோக்கமானது, மூலதனக் குவிப்பு மற்றும் அதன் ஆதிக்கம் மட்டுமே என்பது தான் அது.

இத்தகைய நவீன தாராளமயக் கொள்கைகள் எப்பொழுதுமே ‘நிதிப் பற்றாக்குறையை’ (Fiscal deficit) மிகக் குறைந்த அளவில் கட்டுக்குள் வைத்திருக் கம். அதாவது குறிப்பாக, அரசு முதலீடு களைக் குறைக்கும். கூடவே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியினை குறைத் துக் கொண்டு வரும். இந்த கொரோனா காலகட்டத்தில் அமெரிக்க அரசு கார்ப்ப ரேட் வரியினை மேலும் குறைத்திருக்கி றது. எனவே அமெரிக்கா போன்ற முதலா ளித்துவ நாடுகளின் பொருளாதாரக் கொள் கைகள் கொரோனா கால நெருக்கடியிலி ருந்து மக்களை விடுவிக்க உதவவில்லை.

அமெரிக்காவின் பொருளாதார அணுகுமுறைகள் அமெரிக்க மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும்படியா கவோ, அதன் மூலம் உற்பத்தி பெருக் கத்தை ஊக்குவிக்கும் விதமாகவோ, இதன் விளைவாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாகவோ இல்லை. பொருளாதார புத்தகங்களில் இருக்கும் தத்துவங்களை சிறிதளவாவது,  இந்த கொரோனா நோய்த் தொற்றினால் ஏற் பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலையை போக்குவதற்கு பயன்படுத்தியிருந்தால் கூட, அமெரிக்க மக்கள் இவ்வளவு துய ரினை அடைந்திருக்க மாட்டார்கள். மக்க ளின் வாங்கும் சக்தியை அதிகரிக்க நிவா ரணம் வழங்குவது, உற்பத்தி பெருக்கத் திற்கு கடன் விரிவாக்கம் செய்வது, அதன் மூலம் உற்பத்தி மூலதனத்தை பெருக்கு வது - உள்ளிட்ட  கொள்கைகளை அமல் படுத்துவதை விடுத்து, பங்குச் சந்தையின் விரிவாக்கத்திற்கான கொள்கைகளை அமலாக்கியது அமெரிக்காவின் பெடரல் வங்கி.

உற்பத்தியை உயர்த்தாமல் மதிப்பை மட்டும் உயர்த்துவது...

அமெரிக்க பெடரல் வங்கியின் மறை முக செயல்பாடுகளின் மூலம் பங்குச்  சந்தையில் முதலீடு செய்யும் மூலதனம் அதிகரித்தது. 1990 களின் மத்தியில், அப்போதைய அமெரிக்க பெடரல் வங்கி யின் தலைவர் ஆலன் க்ரீன்ஸ்பன், ‘டாட். காம்’ சிக்கலின் போது, வட்டி விகிதத்தை பெருமளவில் குறைத்தார். அதன் விளை வாக, 1995 முதல் 2000 வரையிலான நாஷ்டாக் பங்குச் சந்தையின் புள்ளிகள் 5 மடங்கு உயர்ந்ததை பார்க்க முடிந்தது. இப்படி செய்வதன் மூலமாக, நிதி மூல தனம் உச்சபட்ச வெற்றியை அடைந்ததாக கொண்டாடப்படுகிறது. உற்பத்தி பெருக் கத்திற்கு வித்திடுவதை விடுத்து, சொத்து மதிப்பை உயர்த்துவதிலும் அதன் விளைவாக பங்குச் சந்தையின் புள்ளி களை உயர்த்துவதிலும் தான் முழு கவன மும் செலுத்தப்படுகிறது.

கடந்த காலங்களைப் போலவே, இந்த கொரோனா காலத்திலும் அமெரிக்க பெடரல் வங்கி பணக் கொள்கைகள் மூலம் வட்டி விகிதத்தினை குறைத்து, பூஜ்ஜி யத்திற்கு மிக அருகில் கொண்டு வந்துள் ளது (0.25%). இதனால் முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதை விடுத்து, பங்குச் சந்தைகளிலும் தனியார் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வ தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால் பல்வேறு எதிர்மறைத் தாக்கங்கள் அமெரிக்காவில் ஏற்பட்டுள் ளன. முதலில், பங்குச் சந்தையின் புள்ளி கள் 40% உயர்வினை அடைவதற்கு அர சால் தரப்பட்ட நிவாரணங்கள் அமெரிக்க மக்களின் பொருளாதார முன்னேற்றத்தி ற்கு ஒரு துரும்பைக் கூட அசைக்க வில்லை. வட்டியில்லாத, ‘இலவச டாலர் கள்’ (cheap money) பங்குச் சந்தையில் கடன் பத்திரங்களை வாங்கவும், சூதாட்டத் தில் இறங்கவும் மட்டுமே பயன்பட்டன. இதன் மூலமாக அமெரிக்கர்களின் கடன் அதிகரித்திருக்கிறது. 

அதேபோல, அமெரிக்காவின் சாதாரண உழைப்பாளி, நடுத்தர வர்க்க மக்கள் ஏற்கனவே கடன்வலையில் சிக்கி யுள்ளனர். அவர்கள் மேலும் கடன் வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு கூட இயலாத நிலையில் பலர் உள்ளனர். பங்குச் சந்தையின் புள்ளி களை உயர்த்திச் செல்லும் பொருட்டு, நாட்டின் உற்பத்தி துறையில் முதலீடு செய் யாமலும், அதன் காரணமாக வேலையின்மை அதிகரித்தும், அதன் தொடர்ச்சியாக மக்கள் நுகரும் திறனற்றும் உள்ளனர். அமெரிக்க அரசும் மாற்றுப் பொரு ளாதார திட்டங்களை யோசிக்கக் கூட இயலாத நிலையில் நிதி மூலதனத்தின் கைப்பாவையாக செயல்படுகிறது. இது அந்த நாட்டின் பொருளாதார நடவடிக்கை களை மட்டுமல்ல; இந்தியா போன்ற நாடு களின் பொருளாதாரக் கொள்கைகளை யும் சேர்த்து தான் கட்டுப்படுத்துகின்றன. அமெரிக்க பங்குச் சந்தை உச்சத்திலேயே இருக்க வேண்டுமென்றால் இந்தியா போன்ற நாடுகளின் பங்குச் சந்தைகளும் வளர்ச்சியில் இருந்தால் தான் சாத்தியம். ஆகவே இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பணக் கொள்கைகளையும் (Monetary policies) சர்வதேச நிதி மூலதனம் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது. இந்த கொரோனா காலத்திலும் இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம் பெற்று வருவதை கவனிக்க வேண்டும்.

அழிவின் போது ‘கொண்டாட்டம்’

மக்கள் துயருறும் காலங்களில் பங்கு சந்தை உயர்வதும் உச்சத்தைத் தொடுவ தும் புதிதல்ல. இந்தியப் பெருங்கடல் பகுதி யில் சுனாமி பேரலை தாக்கி அழித்த பின்னர், ஆசியாவின் முக்கிய பங்குச் சந்தைகளான இந்தியா, இந்தோனேசியா, மலேசியா  மற்றும் தாய்லாந்து பங்கு சந்தைகள் சிறிது கூட சரியவில்லை. மாறாக உயர்ந்ததை பார்க்க முடிந்தது. அதே போல் 2007ம் வருடம் ‘கத்ரினா’ (Katrina) புயல் மெக்சிகோ மற்றும் அமெரிக்காவை தாக்கி பேரழிவை ஏற் படுத்திய போதும், 1992ல் ‘ஆன்ட்ருவ்’ புயல் அமெரிக்காவை தாக்கிய போதும் நாஸ்டாக் பங்கு சந்தை முறையே 10.8 சதமும் 5.8 சதமும் உயர்ந்ததை பார்க்க முடிந்தது. இந்த இரண்டு நிகழ்விலும் அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்த போக்கும் நடை பெற்றது.

சர்வதேச நிதி மூலதனத்திற்கு என்றும் மனித முகம் கிடையாது. உலக மக்கள் எவ்வெப்போது துயரத்தில் ஆழ்ந்திருக்கி றார்களோ, அப்போதெல்லாம் தன்னை வளர்த்துக் கொள்ளும். மக்களின் துய ரங்கள் அதிகரிக்க அதிகரிக்க தன்னை பெருக்கிக் கொள்ளும் வழிமுறைகளை விஸ்தரித்துக் கொள்ளும். இந்த உண்மை யினை மக்களிடமும், தொழிலாளர்களிட மும் கொண்டு செல்ல வேண்டும். இன்று அமெரிக்காவிலும் இந்தியா போன்ற நாடுகளிலும் மக்களின் துய ரினை போக்குவதற்கு, பொது மக்களும் தொழிலாளர்களும் வீதியில் இறங்கி இப்படிப்பட்ட கொள்கைகளுக்கு எதிராக போராடுவதைத் தவிர வேறு எந்த குறுக்கு வழியும் இல்லை. 

ஆதாரம்: பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் கட்டுரை “A Stock Market Boom amidst a Real Economy Crisis” 


 

;