செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

பொருளாதாரம்

img

கூட்டுறவு வங்கிகளை கைப்பற்றுவதா?

8 கோடி ஏழைகளின் டெபாசிட் பணம் பறிபோகும் அபாயம்

 மோடி அரசுக்கு சிபிஎம் எதிர்ப்பு

புதுதில்லி, ஜூன் 26- மத்திய அரசு, அவசரச்சட்டத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகளைக் கையகப்படுத்தி இரு ப்பதைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலை மைக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு ஓர் அவசரச் சட்டத்தின்மூலம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ள 1540  கூட்டுறவு வங்கிகளைக் கையகப்படுத்திட, ஒரு தலைப்பட்சமாக முடிவெடுத்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டிக்கிறது.

கூட்டுறவு வங்கிகள் உட்பட கூட்டுற வுத்துறையானது, மாநில அரசாங்கங்களின் மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்கள் எதையும் கலந்தாலோசிக்கா மலேயே மத்திய அரசு இந்த முடிவினை எடு த்திருக்கிறது. இது நம் நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான மற்றுமொரு தாக்குத லாகும். இப்படி, மத்திய அதிகாரத்தின் கீழ் குவிக்கும் போக்கு நம் அரசமைப்புச்சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை அம்சங் களில் ஒன்றின் மீதான தாக்குதலாகும். இது,  முழுமையாக கூட்டுறவு வங்கிகளின் சுயாட்சி யை அழித்து ஒழிக்கிறது.   தற்போது, இந்த வங்கிகளில் 8.4 கோடிப் பேர், 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு டெபாசிட்  செய்து கணக்கு வைத்திருக்கிறார்கள். மத்திய  பாஜக அரசாங்கம் இந்திய ரிசர்வ் வங்கி யின் ரிசர்வ் தொகையை முன்பு எடுத்துக் கொண்டதைப்போல் இதனையும் எடுத்துக் கொள்ளலாம் என்ற முறையில் அவர்களின் பண த்தின் மீதும் கண்வைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

நாட்டின் பல பகுதிகளிலும், கிராமப்புறங்களி லும் குறிப்பாக விவசாயத் துறையிலும் கூட்டு றவு வங்கிகளும் கூட்டுறவுத் துறையும் முதுகெலு ம்பாக இருந்து வருகின்றன. இந்த டெபா சிட் தொகைகளை மத்திய அரசு கையகப்படு த்தும்போது, ஏழைகளால் டெபாசிட் செய்யப் பட்ட இந்தப் பணத்தை,  பணக்கா ரர்கள் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கப் பட்டிருப்பது தெளிவாகிறது. இது மேலும் கோடானுகோடிமக்களின் வாழ்வாதாரங்களு க்கான ஆதரவை அழித்திடும். நாட்டில் உள்நாட்டு அவசரநிலைப் பிரகட னம் செய்யப்பட்ட 45ஆவது ஆண்டு தினத் தன்று(ஜுன் 25) இந்த அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது உண்மையின் நகை முரணாகும். இது, இந்தியாவின் அரசமைப்புச் சட்ட ஒழுங்கில் பெரிய அளவில் தாக்குதலைத் தொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, இந்த அவசரச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

(ந.நி.)
 

;