பொருளாதாரம்

img

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறையும் - ரேட்டிங்கை குறைத்த மூடீஸ்

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறையும் என்பதால் மூடிஸ் நிறுவனம் ரேடிங்கை
குறைத்து வெளியிட்டுள்ளது.
மோடி தலைமையிலான பாஜக அரசின் பண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி உள்ளிட்ட தவறான பொருளாதாரக்கொள்கையால் நாட்டில் வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று பொருளாதாரநிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக ஆட்டோமொபைல் துறை கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சி கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 5 சதவிகிதமாக பதிவாகி உள்ளது. வரும் மாதங்களில் பொருளாதாரவளர்ச்சி மேலும் குறையும் என்று சர்வதேச நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் மூடீஸ் சேவை நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான ரேட்டிங்கை குறைத்துள்ளது.ஸ்டேபில் என்ற இடத்திலிருந்து நெகடிவ் இடத்திற்கு குறைத்துள்ளதது. மேலும் பொருளாதார மந்தநிலை தொடர்ந்து சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று கணித்துள்ளது. 
 

;