மாநிலங்கள்

img

இமாச்சல்பிரதேசம்: தேசிய நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த மலையின் ஒருபகுதி

இமாச்சல்பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இமாச்சல்பிரதேசத்தில் கின்னௌர் மாவட்டத்தின் காஷாங்நாலா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 5 ல்  பாறைகள் திடீரென சரிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 

;