மாநிலங்கள்

img

ஜார்க்கண்ட்: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 6 பேர் பலி

ஜார்க்கண்ட்;lமாநிலத்தில் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா நோக்கி பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கர்வா அருகே பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்துக்காக காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;