செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

மாவட்டங்கள்

img

அங்கன்வாடியில் குழந்தையை சேர்க்க கோரி மனு  

குளித்தலை, நவ.19- கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் மனத்தட்டையில் அங்கன்வாடி பள்ளியில் சேர்க்க கோரி சார்ஆட்சியரிடம்  குழந்தை அளித்த மனுவில், நான் மனத்தட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனக்கு 2.5 வயது ஆகிறது. என்னை எனது தந்தை மனத்தட்டையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்த்து விடுவதற்காக அழைத்துச் சென்றார். அங்கு உள்ள அங்கன்வாடி பொறுப்பாளர் இந்த குழந்தையை இங்கு சேர்த்துக் கொள்ள முடியாது என்றார். ஏன் என்று எனது தந்தை கேட்டதற்கு எனது தந்தையை அவமரியாதையாக பேசியும் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என திட்டியும் எங்களை அனுப்பி விட்டார். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 

;