மாவட்டங்கள்

img

தருமபுரி: தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம்

தருமபுரி, ஜூலை 11- தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தொழுநோய் கண்டுபிடிப்பு முகாமை பொதுசுகாதார துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வட்டாரத்தில் அரசு வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் கடத்தூர், சிந்தல் பாடி,  இராமியனஹள்ளி, மொரப்பூர், கம்பைநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஒடசல்பட்டி, அம்பாலப்பட்டி, சிந்தல் பாடி, பசுவாபுரம், கந்தகவுண்டனூர், அய்யம்பட்டி, வகுத்தப்பட்டி, நொச் சிக்குட்டை, தொங்கனூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுகாதார மேற்பார்வையாளர்கள் க.கரிகாலன், விஜய் ஆனந்த்,கிராம சுகாதார செவிலியர் மல்லிகா, பகுதி சுகாதார செவிலியர் சுகந்தி, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகி யோர் கொண்ட குழு வீடு வீடாகச் சென்று தொழுநோய் கண்டுபிடிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் பொதுமக்கள், பள்ளி மாண வர்கள் ஆகியோருக்கு தொழுநோய் உள்ளதா என கண்டறிந்து வருகின் றனர். இந்த ஆய்வில் மொரப்பூர் வட்டாராத்தில்  3,700 நபர்களுக்கு பரி சோதிக்கப்பட்டு, எட்டு பேர் பரிந்துரை செய்யப்பட்டதில் ஒரு நோயாளி உறுதி செய்யப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

;